யாழில் குடும்பஸ்தரிடம் சிலிண்டர், பணம் கொள்ளை - ஒருவர் கைது ; மூவர் தப்பியோட்டம்

Published By: Digital Desk 4

24 Apr, 2022 | 11:29 AM
image

யாழ்ப்பாணம் மாநகரில் எரிவாயு சிலிண்டரை கொண்டு சென்ற குடும்பத்தலைவரை வழிமறித்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என அச்சுறுத்தி எரிவாயு சிலிண்டர் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்த நால்வரில் ஒருவர் சில மணிநேரங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

Articles Tagged Under: பணம் கொள்ளை | Virakesari.lk

சந்தேக நபரிடமிருந்து எரிவாயு சிலிண்டர் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நேற்றிரவு 9 மணியளவில் இந்த வழிப்பறிக்கொள்ளை இடம்பெற்றது.

வீதியில் சென்ற குடும்பத்தலைவரை மறித்த நால்வர் தம்மை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் எனத் தெரிவித்து அவரை மிரட்டி அவர் எடுத்துச் சென்ற எரிவாயு நிரப்பிய சிலிண்டர் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அபகரித்து தப்பிச் சென்றனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவம் இடம்பெற்று சில மணிநேரங்களிலேயே கந்தர்மடத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து எரிவாயு நிரப்பட்ட சிலிண்டர் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டன.

ஏனைய மூவரையும் கைது செய்ய தேடி வருவதாகப் பொலிஸார் கூறினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சர் சமந்த வித்தியாரத்ன - அமெரிக்க...

2025-03-26 12:36:39
news-image

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதலாவது...

2025-03-26 12:48:24
news-image

போதைப்பொருள் கடத்தல்காரரான “படோவிட்ட அசங்க”வின் உதவியாளர்...

2025-03-26 12:53:34
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-26 13:07:41
news-image

வெலிகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியின்...

2025-03-26 12:38:35
news-image

வடக்கு மீனவர் பிரச்சனை ; இருதரப்பு...

2025-03-26 11:49:47
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய...

2025-03-26 11:36:32
news-image

இரவு நேர களியாட்ட விடுதி மோதல்...

2025-03-26 11:27:01
news-image

இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச்...

2025-03-26 11:41:56
news-image

வெளிநாட்டு நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து...

2025-03-26 11:43:27
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

2025-03-26 11:04:01
news-image

போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

2025-03-26 11:08:30