ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு - காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் 16 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
கடந்த ஓரிரு தினங்களாக கொழும்பில் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை நிலவிய போதிலும் இந்த போராட்டம் கைவிடப்படாமல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நேற்றையதினம் ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த லங்ஷானின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. இந்நிலையில் நேற்றையதினமும் லக்ஷானின் இறுதிக்கிரியை போன்று காலிமுகத்திடலிலும் இறுதிக் கிரியை நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு அங்கிருந்து வெள்ளைக் கொடிகள் , மலர்வளையங்களை ஏந்தியவாறு பிரதமரின் வாசஸ்தலமான அலரிமாளிமைக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அலரிமாளிகையின் வாசலுக்கு முன்னால் பதாகையொன்று கட்டப்பட்டு அங்கு மலர்வளையங்கள், வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, ஆர்ப்பாட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள 'கோட்டா கோ கிராமம்' என்ற பகுதியில் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 21 ஆம் திகதியுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் குறித்த பகுதியில் அது தொடர்பான பதாதைகளையும் ஏந்தி எதிர்ப்பு வெளியிடப்படுகிறது.
குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஏதேனும் அவசர மருத்துவ தேவைகள் ஏற்படும் என்பதைக் கருத்திற் கொண்டு இலவச மருத்து முகாமும் அங்கு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM