(எம்.மனோசித்ரா)
நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் , முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு தொடர்பில் தெரிவித்துள்ள ஜூலி ஷங் , 'தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களை கேட்டறிவதற்கும் , அமைதியான போராட்டத்திற்கான உரிமை உட்பட ஜனநாயகக் கோட்பாடுகளை நிலைநிறுத்துவது மற்றும் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடுவதற்கும் நான் அவரைச் சந்தித்தேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனான சந்திப்பு தொடர்பில் தெரிவித்துள்ள அவர் , 'அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது தொடர்பான அவரது யோசனைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு , நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இலங்கை பெண் தலைவர்கள் அர்த்தமுள்ள பங்களிப்பை ஆதரிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடனான சந்திப்பில் தெரிவித்தேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM