புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் : ஜனாதிபதி தீர்மானம் ! டலஸ் அல்லது தினேஷ் பிரதமராகும் சாத்தியம்

Published By: Digital Desk 3

24 Apr, 2022 | 07:51 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகளை உள்ளடக்கிய கலப்பு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இவ்வாறு அமைக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு இலங்கை பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர். 

இதே கோரிக்கையினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் முன் வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிற்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் பின்னரே புதிய பிரதமர் குறித்த சர்ச்சை அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் மீண்டும் சூடுப்பிடித்துள்ளது.

மறுப்புறம் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்த ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பிரதமர் பதவி மாற்றப்படுமாயின் அந்த இடத்திற்கு தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அதேபோன்று எந்தவொரு காரணத்திற்காகவும் மற்றுமொரு கட்சியின் பிரதிநிதிக்கு பிரதமர் பதவி கையளித்து விட கூடாது என்பதும் இவர்களினது வலியுறுத்தலாக இருந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார – அரசியல்  நெருக்கடி காரணமாக ஆட்சியை முன்னெடுப்பதிலும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடும் சவால்களை எதிர்க்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ஆளும் கட்சியின் பெரும்பான்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பாராளுமன்றத்திலும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

அதே போன்று காலி முகத்திடல் உட்பட நாட்டில் பல பகுதிகளிலும் ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் அரசாங்கத்தை கண்டித்தும் கடும் தொடர் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட அமைச்சரவை தொடர்பிலும் கடும் விமர்சனங்களே காணப்படுகின்றன. எனவே ராஜபக்ஷர்கள் தொடர்பில்லாத புதிய பிரதமரின் கீழ்  இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் என பலரும் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தனர்.

ஆதனடிப்படையில்  விமல் வீரவன்ச  தரப்பின் பிரதமர் பதவிக்கான பரிந்துரையாக டலஸ் அழகப்பெருமவின் பெயர் காணப்பட்டுள்ளது.

எனவே தான் நீண்ட அமைதிக்கு பின்னர் டலஸ் அழகப்பெரும கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி புதிய பிரதமர் தலைமையில் சகல கட்சிகளும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறும் கோரியிருந்தார்.

ஆளும் கட்சியிலிருந்து சுயாதீனமாக செயற்படும்  விமல் வீரவன்ச உட்பட பலரினதும்  இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கான எதிர்பார்ப்பாக டலஸ் அழகப்பெருமவே இதுவரையில் உள்ளார்.

ஆனால் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களான ரோஹித அபேகுணவர்தன, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் திலும் அமுனுகம உள்ளிட்ட பலர் தினேஸ் குணவர்தனவை புதிய பிரதமராக நியமிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

அந்த வகையில் ஜனாதிபதி கோட்டாபய இடைக்கால அரசாங்கம் குறித்த தீர்மானத்தை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுவதுடன் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமைத்தாங்குமாறு ரணில் விக்கிரமசிங்கவை  ஜனாதிபதி கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி தாக்கல்...

2024-07-13 18:33:43
news-image

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் 

2024-07-13 18:06:56
news-image

அநுராதபுரத்தை மீண்டும் உலக பிரசித்தி பெற்ற...

2024-07-13 18:33:40
news-image

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த...

2024-07-13 17:43:11
news-image

பதுளையில் பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து...

2024-07-13 17:26:31
news-image

கெப் வாகனம் - மோட்டார் சைக்கிள்...

2024-07-13 17:29:32
news-image

மட்டக்களப்பில் 12வது நாளாக இன்றும் தொடரும்...

2024-07-13 16:49:59
news-image

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது!

2024-07-13 16:00:13
news-image

திடீரென தீ பற்றியெரிந்த முச்சக்கரவண்டி ;...

2024-07-13 16:11:13
news-image

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த...

2024-07-13 15:34:34
news-image

கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது...

2024-07-13 13:56:12
news-image

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரின் வீட்டில்...

2024-07-13 13:50:39