காணாமல் போன குடும்பஸ்தர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை

By T. Saranya

23 Apr, 2022 | 03:02 PM
image

கிளிநொச்சி முரசுமோட்டை பழைய கமத்திலிருந்து  காணாமல்போன குடும்பஸ்தர் தொடர்பில் இதுவரை எந்த விமான தகவல்களும் கிடைக்காத நிலையில் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முரசுமோட்டை பழைய கமம் பகுதியில் அவரது குடும்பத்துடன் வசித்து வந்த  முருகர் கனகசிங்கம் (வயது- 75) என்பவர்  வீட்டிலிருந்து 04ம் திகதி காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் அவரது மனைவியால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடந்த 08 ஆம் திகதி  முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த நபரை அவரது உறவினர்கள்  மற்றும் பொலிஸாரும் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றபோதும்  இவர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்க வில்லை.

இந்நிலையில் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் பற்றிய தகவல் அறிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 077 - 1128127 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினர் கோரியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right