நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரில் போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் வைத்திருந்த நபரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் இன்று பிறப்பித்துள்ளார்.

பேஸ்புக் பக்கத்தில் ரவி கருணாநாயக்க லங்கா இன்டலிஜன்ஸ் (Ravi Karunanayake Lanka Intelligence)  எனவும், டுவிட்டர் பக்கத்தில் ரவிகேஒபீஸியல் (@RavikOfficial)  என்ற பெயரிலும் உறுதிப்படுத்தப்பட்ட போலி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, நிதியமைச்சர் குற்றப்புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடொன்றை பதிவுசெய்திருந்தார்.

இந்நிலையில் பலாங்கொடை - பெல்மதுல்லை பகுதியைச் சேர்ந்த 33 வயதான பட்டதாரியொருவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.