Hemas Outreach மையத்தினால் உலக டவுன் சிண்ட்ரோம் தினம் அனுஷ்டிப்பு

Published By: Digital Desk 5

23 Apr, 2022 | 01:02 PM
image

ஹேமாஸ் குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வுச் செயற்பாடுகள் பிரிவான Hemas Outreach மையம், மாற்றுத்திறன் படைத்த சிறுவர்களுக்கான AYATI தேசிய நிலையத்துடன் இணைந்து உலக டவுன் சிண்ட்ரோம் தினத்தை மார்ச் 16ஆம் திகதிராகமவில் அமைந்துள்ள AYATI நிலையத்தில் அனுஷ்டித்திருந்தது.

 தமது சமூகமுன்னெடுப்பான ‘அனைவரையும் சமமாக நடத்துவோம் (Treat All Alike) என்பது பற்றியவிழிப்புணர்வை மேம்படுத்தும் இலக்குடன் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

டவுன் சிண்ட்ரோம் இனால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களுக்காக தயாரிக்கப்பட்டவிசேட புதிய பாடல் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

 “அனைவரையும் சமமாகநடத்துவோம்” என்பது டவுன் சிண்ட்ரோம் உள்ள சிறுவர்கள் மற்றும் குடும்பதாருக்குஅவர்களின் உரிமைகளை ஏற்றுக் கொள்வதற்கான களத்தை ஏற்படுத்திக்கொடுப்பதுடன், சமூகத்தில் அவர்களை உள்வாங்குவதை வலியுறுத்தி வலுவூட்டுவதாகஅமைந்துள்ளது.

AYATI Trust ஸ்ரீ லங்கா மற்றும் Hemas Outreach மையம் ஆகியவற்றின் நிறைவேற்றுபணிப்பாளர் ஷிரோமி மாசகொரால கருத்துத் தெரிவிக்கையில், “சமூகத்தில் அதிகளவுகவனம் செலுத்தப்படாத டவுன் சிண்ட்ரோம் இனால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்கள்தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “அனைவரையும் சமமாகநடத்துவோம்” எனும் சமூக முன்னெடுப்பு அமைந்துள்ளது. 

ஹேமாஸ் நிறுவனத்தைச்சேர்ந்த நாம் உள்ளடக்கமான சமூகம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், சகலசிறுவர்களின் நலன் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் கவனம்செலுத்துகின்றோம். 

Hemas Outreach மையத்தினால் முன்னெடுக்கப்படும் எமதுசெயற்பாடுகள் இந்த இலக்கை எய்துவதில் கவனம் செலுத்துகின்றன.

 இலங்கையின்சுமார் 20% ஆன சிறுவர்கள் ஏதேனும் ஒரு வகையான மாற்றுத்திறனைக்கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 Ayati Trust ஸ்ரீ லங்காவினால்உள்ளடக்கமான சமூகம் உருவாக்கப்பட்டு, அதனூடாக மாற்றுத்திறன் படைத்தநபர்கள்எதிர்கொள்ளும் ஓரங்கட்டல் மற்றும் விசேடத்துவமான சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை போன்றவற்றை இல்லாமல் செய்வது இலக்காக அமைந்துள்ளது. உலகடவுன் சிண்ட்ரோம் தினத்தை அனுஷ்டிக்கும் நிலையில், இந்தக் கறையை இல்லாமல்செய்வதற்காக இணைந்து பணியாற்ற வேண்டியது முக்கியமானதாகும்.

“ஆரோக்கியமான வாழ்க்கை” என்பதை ஊக்குவிக்கும் நிறுவனம் எனும் வகையில்,குடும்பத்தாருக்கு தமது கரிசனைகளை வெளிப்படுத்துவதற்கு உள்ளடக்கமான உலகைஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம்.

 அதனூடாக அதிகளவு தேவைப்படும் சமூகஆதரவைப் பெறவும் எதிர்பார்க்கின்றோம். இந்த சிறுவர் விசேட திறமைகளைக்கொண்டுள்ளனர் அவை வரவேற்று ஊக்குவிக்கப்பட வேண்டும்.

 அவர்களை சமமாகநடத்தி அவர்களுடன் இணைந்து நாம் கொண்டாட வேண்டும்.” என்றார்.

உள்ளடக்கமாக உலகை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கும் வகையில் பல விசேடவிருந்தினர்கள் மத்தியில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ரொட்டரிஇன்டர்நஷனலின் முன்னாள் சர்வதேச தலைவரான கே. ரவிந்திரன் இந்நிகழ்வின் விசேடஅதிதியாக கலந்து கொண்டார். 

சமூக சேவைகள் பணிப்பாளர் சந்தன ரணவீரஆரச்சியிடம் டவுன் சிண்ட்ரோம் தொடர்பான மும் மொழிகளிலும் அமைந்த அறிவுறுத்தல்கையேடுகள் வழங்கப்பட்டதுடன், அவை நாடு முழுவதிலுமுள்ள 331 பிரதேசசெயலகங்களுக்கும் விநியோகிக்கப்படும்.

நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ரொட்டரி இன்டர்நஷனலின் முன்னாள்சர்வதேச தலைவர் கே. ரவிந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், “உலகளாவிய ரீதியில் நான்கண்ட சகல வசதிகளிலிருந்தும், சிறந்தவற்றில் ஒன்றாக AYATI தரப்படுத்தப்பட்டுள்ளது.

“இலாபத்துக்கு அப்பாலான வியாபாரம்” எனும் தனது தொனிப்பொருளுக்கமையஹேமாஸ் இயங்குகின்றது. 

அரவணைப்போரின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளைகொண்டாட வேண்டியது முக்கியமானதாகும்.

 சமூகத்தினுள் சிறுவர்களை ஒன்றிணைக்கவேண்டியது மிகவும் முக்கியமானதுடன், பிரதான கட்டமைப்பினுள் சிறுவர்களைஒன்றிணைப்பது என்பது அனைவரின் பயிலலையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.

வழங்கும் சூழலை இது ஊக்குவிப்பதுடன், இரு தரப்பிலும் எதிர்பார்ப்புகளைஅதிகரிப்பதாக அமைந்துள்ளது.

 அதனூடாக சிறுவர்களை மேம்படுத்தி அதிகளவுகருணை படைத்தவர்களாக திகழச் செய்கின்றது.” என்றார்.

ஆரோக்கியமான வாழ்வு, ஏனெனில் ஒவ்வொரு குடும்பமும் சிறந்த நாளையைகொண்டிருக்க வேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைஊக்குவிப்பதுடன், “எந்தவொரு பிள்ளையும் ஓரங்கட்டப்படக்கூடாது” எனும் சமூகத்தைஊக்குவிப்பதில் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி கவனம் செலுத்துகின்றது.

 இவ்வாறானசெயற்பாடுகளினூடாக, இந்த சிறுவர்கள் மற்றும் குடும்பத்தார் தினசரி எதிர்கொள்ளும்நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.

 டவுன் சிண்ட்ரோம் உள்ள சிறுவர்களைஅன்புடனும் மதிப்புடனும் நடத்தப்பட வேண்டியதை குறிக்கும் வகையில் அமிலஜயசுவர்ணவின் புதிய பாடல் அமைந்துள்ளது.

Hemas Outreach மையத்தின் வர்த்தக நாம தூதுவரும், Ayati Trust ஸ்ரீ லங்காவின்காப்பாளரும் ரொஷான் மஹாநாம கருத்துத் தெரிவிக்கையில், “சமூகம் எனும் வகையில்அனைவரையும் நாம் சமமாக நடத்த வேண்டும்.

 பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சகலசெயற்பாடுகளையும் ஈடுபடுத்த வேண்டும். இந்த உள்ளடக்கமான சூழலைஏற்படுத்துவதற்கு கல்வி அமைச்சினால் மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என நான் கருதுகின்றேன்.

 இந்தச் சிறுவர்கள் கொண்டுள்ள விசேடதிறமைகளினூடாக, சமூகத்தில் அவர்களை பங்காற்றச் செய்வதற்கு அவர்களின் மீதஅதிகளவு அன்பையும் இரக்கத்தையும் நாம் வெளிப்படுத்த வேண்டும்.” என்றார்.

பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் டவுன் சிண்ட்ரோம் உள்ளசிறுவர்கள் மத்தியில் காணப்படும் உளைச்சலை இல்லாமல் செய்வதற்காகவும் அமைந்தசமூக முன்னெடுப்புடன் இணைந்து கொள்வதற்கு:http://web.facebook.com/ekasesalakamu

களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, MASஹோல்டிங்ஸ், ரொஷான் விஜேராம மையம், இலங்கை இராணுவம் மற்றும் ரொட்டரிமாவட்டம் 3220 ஆகியவற்றின் பங்காண்மையில் மாற்றுத்தின் படைத்தசிறுவர்களுக்கான AYATI தேசிய நிலையம் செயற்படுகின்றது.

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் கீழ் நிறுவப்பட்ட ஹேமாஸ் Outreach Foundation,கூட்டாண்மை சமூகப் பொறுப்பு என்பதனூடாக “ஆரோக்கியமான வாழ்க்கை” என்பதைஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

 இலங்கையின் குடும்பங்களின் வாழ்க்கையில் பரிபூரணஇடையீடுகளினூடாக “ஆரோக்கியமான வாழ்க்கை” என்பதை ஊக்குவிக்கும் குழுமத்தின்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் அமைந்துள்ளது. 

இந்த மையம்,நம்பிக்கை நிதியமாக முன்னணி காப்பாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58