பிரேசில் நாட்டில் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி நூறு வயது வயோதிபர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கடை மட்ட ஊழியராக பணியை தொடங்கிய வால்டர் ஆர்த்மன் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து விற்பனை மேலாளராக உயர்ந்தார். 

நூறு வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றும் வால்டர், பணியை விரும்பி செய்தால், ஒரே நிறுவனத்தில் நிச்சயம் நீடிக்க முடியும் என்கிறார். அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது போல, ஆரோக்கியத்திலும் தீவிர கவனம் செலுத்துவது அவசியம் என கூறும் வால்டர், பெரும்பாலும் வயிற்றுக்கு ஒவ்வாத அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் உண்பதை தவிர்த்து விடுவாராம். தவிர, தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுவதிலும் தவறுவதில்லையாம்.

கடமையாற்றுவதிலும் கின்னஸ் உலக சாதனை படைக்க முடியும் என நிரூபித்த வால்டரை தற்போது ஒட்டுமொத்த உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கிறது.