மெக்கார்டில் என்ற தசை கோளாறு பாதிப்பிற்கான சிகிச்சை

Published By: Digital Desk 5

23 Apr, 2022 | 11:45 AM
image

உலக அளவில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள் மெக்கார்டில் என்ற அரிய வகை தசை கோளாறு பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.

 இதற்கு உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் முழுமையான நிவாரணத்தை பெறலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மெக்கார்டில் நோய் என்பது அரிய வகை தசை கோளாறு பாதிப்பாகும். நம்முடைய உடலில் உள்ள தசைகளில் இருக்கும் செல்களில் கிளைக்கோஜன் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

 இந்த கிளைக்கோஜனை ஆற்றலாக மாற்றி உடல் பயன்படுத்திக்கொள்ள குறிப்பிட்ட வகை என்சைம் உற்பத்தியாக வேண்டும்.

 இந்த என்சைம் எனப்படும் நொதி உற்பத்தி ஆகாத நிலையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புதான் மெக்கார்டில் நோய் எனப்படும் தசை கோளாறு பாதிப்பாகும்.

எம்முடைய உடலில் உள்ள செல்கள் தங்களின் செயலாற்றலுக்காக குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரையை பயன்படுத்துகின்றன.

 நீங்கள் உணவருந்தும் போது, உங்களின் செரிமான மண்டலத்தின் இயக்கத்தை கடந்து, உண்டாகும் அதிக அளவு குளுக்கோஸ், கிளைகோஜனாக மாற்றம் அடைகிறது. 

இந்த கிளைக்கோஜன் கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்கப்படுகிறது.

நீங்கள் பயணங்களை மேற்கொள்ளும் போதோ அல்லது விரதங்களை மேற்கொள்ளும் போதோ அல்லது சாப்பிடாமல் இருக்கும் போதோ.. உங்கள் உடலில் உள்ள குருதியில் குளுக்கோஸின் அளவு குறைகிறது. இந்நிலையில் உங்கள் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கிளைகோஜனை ஆற்றல் சம நிலைக்காக உடல் பயன்படுத்த தொடங்குகிறது. 

இந்த தருணத்தில் கிளைக்கோஜன், ஒரு பிரத்தியேக என்சைம் எனப்படும் நொதியால் குளுக்கோஸாக உடைக்கப்பட்டு, உடலின் ஆற்றலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

 இந்நிலையில் மெக்கார்டில் என்ற தசை கோளாறு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் தசைகளில் சேமிக்கப்பட்ட கிளைகோஜன் உடலின் ஆற்றலுக்கு பயன்படுத்த இயலாத நிலை உண்டாகிறது.

எம்மில் யாருக்கேனும் 8 முதல் 10 நிமிடங்களில் உடற்பயிற்சி செய்யும் போது சோர்வு ஏற்பட்டாலோ.. வெளியேற்றும் சிறுநீர் நிறமாற்றம் அடைந்திருந்தாலோ.. தசை பிடிப்பு அல்லது தசை வலி ஏற்பட்டாலோ.. குறிப்பாக தொடை பகுதியில் உள்ள தசைகளில் நாட்பட்ட வலியோ பலவீனமோ அடைந்திருந்தால், உங்களுக்கு மெக்கார்டில் எனப்படும் தசை கோளாறு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இதுதொடர்பாக மருத்துவரின் ஆலோசனையுடன் அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

மரபணு பிறழ்வு காரணமாக ஏற்படும் இத்தகைய அரிய வகை தசை கோளாறு ஆண், பெண் என இருபாலாருக்கும் 15 வயது முதல் 30 வயது வரையில் ஏற்படுகிறது.

 மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டவுடன் இவர்கள் எலக்ட்ரோ பயோகிராபி, லாக்டிக் அமில பரிசோதனை, எம்ஆர்ஐ பரிசோதனை, தசை திசு பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

இதன் பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு முறையை பின்பற்ற வேண்டும். இதன்போது கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சிக்கு முன்னதாகவும் மருத்துவர் பரிந்துரைக்கும் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையை பருகலாம். 

மேலும் உடற்பயிற்சி மற்றும் உணவு முறை குறித்து மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழிமுறையை உறுதியாக பின்பற்றினால், இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம்.

டொக்டர் ராஜேஷ்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15
news-image

ஹைபர்லிபிடெமியா எனும் அதீத கொழுப்புகளை அகற்றுவதற்கான...

2025-01-05 17:50:36
news-image

ரியாக்டிவ் ஒர்தரைடீஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-01-03 16:39:17
news-image

உணவுக் குழாய் பாதிப்பு - நவீன...

2025-01-02 16:38:45
news-image

கை விரல் நுனியில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-01-01 21:40:07