பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இரண்டு நாள் சுற்றப்பயணம் மேற்கொண்டு நேற்று முன்தினம் (21) இந்தியா சென்றுள்ளார்.
இந்நிலையில், அங்கு பல்வேறு கலைக்குழுவினர் விமான நிலையத்தில் பாரம்பரிய நடனம் ஆடியும், இசைக்கருவிகளை இசைத்தும் போரிஸ் ஜோன்சனுக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் நேற்று (22) இந்திய பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனை பிரதமர் மோடி வரவேற்றார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தை சந்தித்து பேச்சு
அகமதாபாத்தில் உள்ள அதானி குழும அலுவலகத்தில், தொழிலதிபர் கௌதம் அதானியை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, சுற்றுச்சூழல், பசுமை எரிசக்தி, விமான தயாரிப்பு, இராணுவ ஆயுத தயாரிப்பு உள்ளிட்டவற்றில், அதானி குழுமம், பிரிட்டன் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
காந்தி நினைவிடத்தில் போரிஸ் ஜோன்சன் அஞ்சலி
நேற்று முன்தினம் (21) டெல்லி, ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் அஞ்சலி செலுத்தினார்.
அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் காந்தியை பாராட்டி எழுதினார். போரிஸ் ஜோன்சனுக்கு மார்பளவு காந்தி சிலை பரிசாக வழங்கப்பட்டது.
போரிஸ் ஜோன்சன் குஜராத்தில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்கு சென்றார்.
ஊடகவியாளர்கள் சந்திப்பு
பிரதமர் மோடி - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூட்டாக ஊடகவியாளர்களை சந்தித்தனர்.
பிரதமர் மோடி தெரிவித்ததாவது,
இங்கிலாந்து முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது. இங்கிலாந்து - இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த போரிஸ் ஜோன்சன் பல நடவடிக்கை எடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்ததாவது,
என் கையில் இந்தியன் தடுப்பூசி (COVID19 தடுப்பூசி) உள்ளது, அது எனக்கு நன்றாக உதவியது. இந்தியாவுக்கு மிக்க நன்றி.
இன்று நாங்கள் அற்புதமான விவாதங்களை நடத்தியுள்ளோம் மற்றும் எல்லா வகையிலும் எங்கள் உறவை பலப்படுத்தியுள்ளோம்.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான கூட்டாண்மை நமது காலத்தின் வரையறுக்கும் நட்புகளில் ஒன்றாகும். உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம்.
உக்ரேனில் உடனடிப் போர்நிறுத்தம் மற்றும் போர் பிரச்சினைக்குத் தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினோம்.
சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காகன நவீன தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க தயார். பாதுகாப்புத்துறையில் இந்தியாவுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க விரைந்து ஒப்புதல் வழங்கப்படும்.
போர் விமானங்கள் தயாரிப்பு தொழில்நுட்பம் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும். எரிசக்தி பாதுகாப்பில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தேவை என்றார்.
ஊடகவியாளர்கள் சந்திப்பின் போது போரிஸ் ஜோன்சனிடம், இந்திய வங்கிகளில் கடன் மோசடி செய்து விட்டு லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி ஆகியோர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த போரிஸ் ஜோன்சன் தெரிவித்ததாவது,
நீங்கள் குறிப்பிட்ட இரண்டு தனிநபர்களை பொருத்தவரை நாடு கடத்தல் வழக்கு, இதில் பல்வேறு சட்ட ரீதியான நுட்பமான விஷயங்கள் உள்ளதால் சற்று கடினம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இங்கிலாந்து அரசாங்கம் அவர்களை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM