தொடரும் மருந்துத் தட்டுப்பாடு - இலங்கைக்கு உதவ ஆசிய அபிவிருத்தி வங்கி , உலக வங்கி இணக்கம்

By Digital Desk 5

22 Apr, 2022 | 05:00 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பில் மருத்துவ சேவை பிரிவுகளில் 525 மருந்து வகைகளுக்கும் , 5376 சத்திரசிகிச்சை மருந்து வகைகளும் நிறைவடைந்துள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

திடீர் இதய நோய், நீரழிவு நோய் உள்ளிட்ட பல முக்கிய உயர் பாதுகாக்கும் நோய்களுக்கு உயோகிக்கும் மருந்துகள் பலவும் இவற்றில் உள்ளடங்குகின்றன.

இதே போன்று தனியார் வைத்தியசாலையில் 76 முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தனியார் வைத்தியசாலை மற்றும் தாதியர் இல்ல சங்கம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய ஒட்டுமொத்தமாக மருந்துவ கட்டமைப்பில் சுமார் 5900 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக 30 மில்லியன் டொலரை வழங்குவதற்கு உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

The list goes on - Sri Lankan hospitals face severe drug shortage as  economic crisis deepens | Tamil Guardian

அதற்கமை தட்டுப்பாடு நிலவும் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான கடன் கடிதம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு உலக சுகாதார ஸ்தாபனத்திடமும் நாட்டில் தட்டுப்பாடு நிலவும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , அதற்கு சிறந்த பதில் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதற்கமைய அடுத்த மாதத்திற்குள் நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்திரேலியா அரசாங்கம்...

2022-11-30 09:09:51
news-image

உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்களை தாமதமின்றி நடத்தவேண்டும்...

2022-11-30 09:02:29
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-30 08:45:56
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்!

2022-11-30 08:50:50
news-image

உள்நாட்டில் பயிற்சிகளைப் பெற்று வெளிநாடு செல்லும்...

2022-11-29 21:43:22
news-image

சுகாதாரத்துறை ஆபத்துக்குள் தள்ளப்படும் நிலை :...

2022-11-29 21:48:08
news-image

பாராளுமன்ற செயற்பாடுகளை புறக்கணிப்போம் - லக்ஷமன்...

2022-11-29 21:56:33
news-image

இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழிக்க வேண்டாம்...

2022-11-29 21:58:30
news-image

அதிகாரப் பகிர்வுக்கு ஆளுங்கட்சி இணங்குமா ?...

2022-11-29 16:21:19
news-image

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த  குற்றச்சாட்டில்...

2022-11-29 22:16:06
news-image

மருந்து உற்பத்தி வழிகாட்டலில் மாற்றத்தை ஏற்படுத்தினால்...

2022-11-29 16:06:19
news-image

 'றோ' தலைவருடனான சந்திப்பு குறித்து பாராளுமன்றத்திற்கு...

2022-11-29 15:32:40