நுவரெலியா இராகலை பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட சென் ஜோன்ஸ் தோட்டத்தில் இடம்பெற்ற விபத்தில்  இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் டெங்கு நோயினால் மாணவன் உயிரிழப்பு | Virakesari.lk

இச்சம்பவத்தில் 28 வயதுடைய விஜயரட்னம் ஜிவரட்னம் என்பவரே உயிரிழந்துள்ளதாக இராகலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தனது நண்பர் ஒருவருடன் நுவரெலியா-  இராகலை பிரதான வீதியின் சென்ஜோன்ஸ் தோட்டத்துக்கருகில் நடந்து சென்ற இவர்கள் மீது இராகலையை நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்த இனந்தெரியாத நபர் ஒருவர் வேகமாக மோதிவிட்டு தப்பி சென்றதாக இராகலை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.