காலி முகத்திடல் ஆர்ப்பட்டத்திற்கு ஆதரவாக புத்தளத்தில் ஒன்று திரண்ட மக்கள்

By T. Saranya

22 Apr, 2022 | 02:14 PM
image

கொழும்பு - காலி முகத்திடலில் இடம்பெற்று வருகின்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புத்தளத்தில் நேற்று நள்ளிரவு முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவும் குறித்த அரசாங்கம் பதவிவிலகும் வரை கோத்தா கோ கம என கொழும்பில் அமைக்கப்பட்டுள்ளதைப் போன்று புத்தளத்திலும் கூடாரங்களை அமைத்து மக்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மதபேதமின்றி சிங்களம், தமிழர், முஸ்லிம்களென மூவின மக்களும் கலந்து கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right