இன்று (22) உலக நாடுகள் முழுவதும் “சர்வதேச புவி தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சர்வதேச புவி  தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். 

1970 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் திகதி சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசுபடுவதை குறைக்கும் வகையிலும் ‘புவி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதனை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் நமது புவி முழுவதும் நிலவும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் காட்டும்  வகையில் சிறப்பு டூடுளை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.