பிரதமர் மஹிந்த தலைமையில் அரசாங்கத்தை முன்னெடுக்க ஆளும் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

By T Yuwaraj

21 Apr, 2022 | 10:14 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பலமான முறையில் முன்னெடுத்து செல்லும் யோசனை இன்று பாராளுமன்றி கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற ஆளும் தரப்பு குழு கூட்டத்தின் போது ஏகனமதாக நிறைவேற்றப்பட்டது.

ஆசிரியர் - அதிபர் சம்பளத்தை இரு கட்டமாக அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் -  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ | Virakesari.lk

சமூக கட்டமைப்பில் தோற்றம்பெற்றுள்ள பிரச்சினைகள் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு  மத்தியில் அதனை அரசாங்கம் பலமான முறையில் எதிர்க்கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் இதன்போது குறிப்பிட்டார்.

பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை தொடர்ந்து பலமான முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என  இதன் போது முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சகல உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி இணக்கம் தெரிவித்தனர்.குறித்த யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் யு.கே.சுமித் உறுதிப்படுத்தினார்.

சமூக  கட்டமைப்பில் அத்தியாவசிய சேவைத்துறையில் தோற்றம் பெற்று;ள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் தீர்வு பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை துரிதகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விடயதானங்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள் இதன்போது குறிப்பிட்டார்கள்.

நெருக்கடியான சூழ்நிலைமையை கருத்திற்கொண்டு சிரேஷ்ட அமைச்சர்கள் பதவி விலகி வழங்கிய ஒத்தழைப்பிற்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள் இதன்போது நன்றி தெரிவித்தார்.

அரசாங்கம் பலவீனமடைந்துள்ளதாக ஒருதரப்பினர் தவறான கருத்துக்களை சமூகமயப்படுத்தியுள்ளார்கள்.மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளவும்,அரசாங்கத்தை பலமான முறையில் முன்னெடுத்து செல்லவும் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன செயற்பட வேண்டும் என  பிரதமர் இதன்போது ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வலுவிழக்கும் உலக ஒற்றை அதிகார அரசியல்...

2022-11-28 11:03:51
news-image

அடுத்த வருடம் முதல் ஆரம்ப வகுப்பிலிருந்தே...

2022-11-28 10:59:58
news-image

மனைவியை தாக்கிய நபர் வைத்தியசாலைக்குச் சென்றபோது...

2022-11-28 10:53:01
news-image

போதைப்பொருள் கடத்தலிற்கு சிங்கப்பூர் பாணியில் மரணதண்டனை...

2022-11-28 11:05:01
news-image

கரையோரப் பாதை ரயில் மார்க்கத்தின் சமிக்ஞை...

2022-11-28 10:26:40
news-image

அராலியில் கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு...

2022-11-28 10:57:53
news-image

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 3 புதிய...

2022-11-28 10:44:24
news-image

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் யாழில்...

2022-11-28 10:19:37
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43
news-image

நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும்...

2022-11-28 08:46:08
news-image

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா...

2022-11-27 13:52:12
news-image

29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த...

2022-11-27 13:48:19