உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் மரணித்தவர்களுக்கு சபையில் அஞ்சலி

By T. Saranya

21 Apr, 2022 | 01:46 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் இடம்பெற்று மூன்று வருடம் பூரணமாகியுள்ள நிலையில்  இதனை நினைவு கூர்ந்து, மரணித்தவர்களுக்காக நேற்று சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதைத்தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி கோரிக்கை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் இடம்பெற்று இன்று மூன்றுவருடங்கள் ஆகின்றன. 

என்றாலும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் குண்டுத் தாக்குதலில் மரணித்தவர்களுக்காக இந்த சபையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதன்போது சபாநாயகர், நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்ய முடியாது என்றார்.

அதனைத்தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், மரணித்தவர்களுக்கு சபையில் மௌன அஞ்சலி செலுத்திய முன்மாதிரிகள் இருக்கின்றன. 

மகாநாயக்க தேரர் ஒருவரின் இறப்பை அடுத்து, விமல் வீரவன்ச கொண்டுவந்த பிரேரணைக்கு அமைய அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. அதேநேரம் ராமாஞ்ச நிகாய மகாநாயக்க தேரர் இறந்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என நான் பிரேரணை கொண்டுவந்தபோது அதற்கு அன்று அனுமதி கிடைக்கவில்லை.

என்றாலும் நிலையியற் கட்டளைகளை சற்று பின்தள்ளிவிட்டு,  உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் மரணித்த நூற்றுக்கணக்கான மக்களுக்காக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்த முடியாவிட்டால், 30 செக்கன்களாவது வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். இறுதியில் சபையில் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் மரணித்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை...

2022-10-07 12:10:56
news-image

சர்ச்சைக்குரிய இந்திய நிறுவன மருந்துகள் இலங்கையில்...

2022-10-07 12:10:55
news-image

அவசியமான விடயங்களை இலங்கை செய்வதற்காக காத்திருக்கின்றோம்...

2022-10-07 11:55:23
news-image

வீடொன்றிலிருந்து 6 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்...

2022-10-07 12:15:36
news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 12:12:33
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12