உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் ; மட்டக்களப்பில் நினைவேந்தல்

Published By: Digital Desk 3

21 Apr, 2022 | 12:26 PM
image

மட்டக்களப்பு சீயோன் தேவலாயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

சீயோன் தேவாலயம், காந்திபூங்கா மற்றும் கல்லடி பாலத்துக்கருகிலுள்ள நினைவு தூபிகளில் இன்று  (21) காலை 9.05 மணிக்கு இடம்பெற்ற நினைவேந்தல்களில் உயிரிழந்தவர்களின் உறவுகள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்ட மலர் தூவி சுடர் ஏற்றி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2019 ம் ஏப்பில் 21 ம் திகதி தேவாலயத்தின் மீது நடாத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 93 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3 வது ஆண்டு  நினைவேந்தலை முன்னிட்டு குண்டுவெடிப்பு இடம்பெற்ற சீயோன் தேவலாயத்தில் போதகர் ரொசான் மகேசன் தலைமையில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி இடம்பெற்ற விசேட ஆராதனையில் உயிரிழந்தவர்களின் உறவுகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஆராதனையில் ஈடுபட்டு  அஞ்சலி செலுத்தினர்.   

அதேவேளை மட்டு காந்தி பூங்காவில் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் மட்டு மாநகரசபை முதல்வர் ரி.சரவணபவான் தலைமையில் மாநகரசபை உறுப்பினர்கள் அரசியல்வாதிகள் கலந்து கொண்டு தூபியில் மலர் தூவி சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து மட்டு கல்லடி பாலத்துக்கு அருகில் தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உறவுகளால் அமைக்கப்பட்ட தூபியில் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் உயிரிழந்தவர்களின் உறவுகள் மலர்வைலையம் வைத்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் உயிரிழந்தவர்களுக்கு நீதிவேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00