சமையல் எரிவாயு விநியோகத்தை நிறுத்தும் லிட்ரோ நிறுவனம்

21 Apr, 2022 | 12:42 PM
image

போதியளவு எரிவாயு கையிருப்பில் இல்லாமையால் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏப்ரல் 25 ஆம் திகதி வரை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், தகன சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

8,500 மெட்ரிக் தொன் எல்பிஜி சரக்குகளுடன் மேலும் இரண்டு கப்பல்கள் ஏப்ரல் 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாட்டிற்கு வர உள்ளதாகவும், அதன் பின்னர் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் எனவும் லிட்ரோ கே லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right