எதிர்வரும் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர் தாம் ஓய்வு பெறப் போவதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி தலைவர் பிரண்டன் மெக்கலம்  தெரிவித்துள்ளார். 

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி மெக்கலத்தின் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

34 வயதான மெக்கலம், 99 டெஸ்ட் போட்டிகளில் 6273 ஓட்டங்களையும், 254 ஒருநாள் போட்டிகளில் 5909 ஓட்டங்களையும், 71 டி20 போட்டிகளில் 2140 ஓட்டங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரண்டன் மெக்கலம் தாம் எதிர்வரும் டி20 உலகக்கிண்ண போட்டிகளைக் கவனத்திற் கொண்டு தாம் இந்த முடிவை மேற்கொண்டதாக அறிவித்துள்ளார். எனவே டி20 உலகக்கிண்ணத்தில் இவர் பங்குபற்ற மாட்டார்.

எதிர்வரும் இந்திய அணியுடனான தொடருக்கு கேன் வில்லியம்சன் அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலுள்ள கேன் வில்லியம்சன் இனிமேல் நியூசிலாந்து அணியின் தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.