(எம்.எப்.எம்.பஸீர்)
நீதிமன்ற உத்தரவுகளை பாதிக்கும் வண்ணம், பொய்யான பிரசாரங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் மீதான சுயாதீனத் தன்மை தொடர்பில் சந்தேகங்களை ஏற்படுத்துவதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தி, மன்றுக்கு அறிக்கையிடுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று (20) உத்தரவிட்டது. கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள திலகரத்ன இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
கோட்டை நீதிவான் திலின கமகே, கடந்த 18 ஆம் திகதி சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமூக ஊடக வலைத்தளம் தொடர்பிலான குற்றங்கள் குறித்து விசாரிக்கும் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகளுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
B A S L இலக்ஷன் 2019/02 எனும் வட்ஸ் அப் குழுமம் ஊடாக, ' மோசடிக் கார யானை திருடன் நீதிமன்றுக்கு நியமிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உடன் தலையீடு செய்ய வேண்டும்.
இல்லை எனில் பாரிய விளைவுகள் மிக விரைவில்' என கருத்து பிரச்சரம் செய்யப்பட்டுள்ளதாக, கோட்டை நீதிவான் திலின கமகேவின் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் நேற்று நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
அத்துடன் இந்த தகவல் சமூக ஊடகங்களிடையே பரிமாற்றப்பட்டுள்ளதாகவும், அந்த தகவல் மக்களிடையே சென்றடையும் போது, பொது மக்களிடையே குழப்பம் ஏற்படலாம் எனவும், அது நீதிமன்ற சுயாதீனத் தன்மையையும் பாதிக்கும் எனவும் அம்முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.
முறைப்பாட்டாளரான நீதிவான் திலின கமகே, தனக்கு எதிராக சட்ட விரோத யானைக் குட்டி வைத்திருந்தமை தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டதாகவும், அவ்வழக்கிலிருந்து தான் பூரணமாக விடுதலைச் செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான பின்னணியில் இந்த சமூக ஊடக பரப்புரை முன்னெடுக்கப்படுவதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM