ரஷ்ய, பெலாரஸ் வீரர்களுக்கு விம்பிள்டனில் விளையாடத் தடை

Published By: Digital Desk 3

21 Apr, 2022 | 09:33 AM
image

(என்.வீ.ஏ.)

ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீர, வீராங்கனைகளுக்கு விம்பிள்டனில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரேன் மீதான படையெடுப்புக்கு ஆட்சேபமும் எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் அந்த இரண்டு நாட்டு வீர, வீராங்கனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அகில இங்கிலாந்து லோன் டென்னிஸ் கழகம் அறிவித்துள்ளது.

ஆண்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள ரஷ்ய வீரர் டெனில் மெட்வடேவ், பெண்களுக்கான தரவரிசையில் நான்காம் இடத்திலுள்ள பெலாரஸ் வீராங்கனை அரினா சபாலென்கா ஆகியோர் பாதிக்கப்படும் உயரிய நிலை வீர, வீராங்கனையாவர்.

ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும் சகலவிதமான புல்தரை டென்னிஸ் போட்டிகளிலும் அந்த நாடுகளின் வீர, வீராங்கனைகளுக்கு பங்குபற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக அகில இங்கிலாந்து புல்தரை டென்னிஸ் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை நியாயமற்றது எனவும் அது இவ் விளையாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தொழில்சார் டென்னிஸ் வீரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

'தேசியத்தை அடிப்படையாகக்கொண்ட பாகுபாடு விம்பிள்டனுடனான எமது ஒப்பத்தந்தை மீறுவதாகும். தொழில்சார் வீரர்கள் சங்கத்தின் (ATP) தரவரிசைகளில்   மட்டுமே வீரர்களின் நுழைவு இருக்கின்றது என்பது அந்த ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது' என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

'இந்தத் தீர்மானத்துக்கு பதிலளிக்கும் எந்த வகையான நடவடிக்கையும் எமது நிறைவேற்றுச் சபையுடனும் உறுப்பு சபைகளுடனும் கலந்தாலோசித்து மதிப்பீடு செய்யப்படும்' என சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 'ரஷ்யாவின் உலகளாவிய செல்வாக்கை சாத்தியமான வலிமைமிக்க வழிகளில் கட்டுப்படுத்தும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது' என அகில இங்கிலாந்து லோன் டென்னிஸ் கழகம் தெரிவித்தது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் எதிர்வரும் ஜுன் 27ஆம் திகதியிலிருந்து ஜூல 10ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35