இலங்கை சந்தையில் தெற்காசியாவின் முன்னணி ஈ-வர்த்தக ஜாம்பவான்களான டராஸ்

Published By: Priyatharshan

21 Oct, 2016 | 12:48 PM
image

தெற்காசியாவில் மிகப் பெரிய ஈ-வர்த்தக தளமாக டராஸ் அமைந்துள்ளது. பாகிஸ்தான், மியன்மார், பங்காளதேஷ் ஆகிய நாடுகளில் அது செயற்பாடுகளைக் கொண்டுள்ளது. 

இது வாடிக்கையாளருக்கான ஒரு சந்தைத் தளமாகும். உள்ளுர் மற்றும் சர்வதேச விற்பனையாளர்களிடமிருந்து அசல் வர்த்தக முத்திரை பொறிக்கப்பட்ட பொருள்களை நியாயமான விலைகளில் பெற்றுக் கொடுக்கின்றது. 

ரொக்கெட் இன்டர்நெட் நிறுவனத்தினால் 2012 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் ஒரிடோ நிறுவனத்தினதும், ஐக்கிய இராச்சிய அரச அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் (DFI) CDC குழுமத்தின் ஆதரவைப் பெற்றது. 

2015 ஆம் ஆண்டில் அதன் முதல் நிதி சேகரிப்பாக டராஸ் 55 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டியது.

அசல் உற்பத்திகள் பலவற்றின் கலவையாக இருப்பதனாலும் போட்டித்தன்மை கொண்ட பாரிய பொருள் கொள்வனவு அனுபவத்தை வழங்குவதனாலும், டராஸ் பெருமை அடைகின்றது. இது ஒரு எண்ணக்கரு மட்டும் அல்ல.

எண்ணக்கருக்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் ஒரு நம்பிக்கையாகும். இந்த செயல் வடிவம் நிச்சயமான பெறுபேறுகளை அள்ளித் தருகின்றது என நிறுவனம் அறிவித்துள்ளது. ஆரம்பம் முதலே ரூடவ்-வர்த்தகத்தின் முக்கிய பண்புகளை உள்ளடக்கி சந்தையில் செயற்பட்டு சரியான தீர்வுகளை வழங்குவதில் அது வெற்றியீட்டியுள்ளது.

டராஸ் செயற்படும் நாடுகளில் 2015 ஈ-வர்த்தகத்துக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ‘ப்ளாக் பிறைடேயை’ அறிமுகம் செய்தது. நாட்டில் சில்லறை வர்த்தகத்தின் பரிமாணத்தை அது முற்றிலும் புரட்சிகரமாக்கியுள்ளது. டராஸ் பெஷன் வாரம் உட்பட இன்னும் பல நிகழ்வுகளும் இதில் அடங்கும். இணைய வழி கொள்வனவுக்கு வழிவகுத்த முதலாவது பெஷன் வாரம் இதுவாகும். நாட்டின் பெஷன் ஷோ வரலாற்றையும் இது நவீனமயப்படுத்தி உள்ளது.

2016 ஒக்டோபரில் இது சம்பந்தமான ஊடக சந்திப்பொன்று சின்னமன்ட் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. அற்புதமான எண்ணங்களுடன் இலங்கை சந்தையில் வாடிக்கையாளர்களைச் சந்திக்கவுள்ளதாக இங்கு அறிவிக்கப்பட்டது. பல்வேறு விதமான அசல் பொருள்கள், வியக்கத்தக்க விலைகள், எண்ணற்ற சேவைகள் என்பன இதில் அடங்கும். 

இணையத்தள ஊடுருவல் இங்கு துரிதமாக அதிகரித்துள்ளது. இணையவழி பொருள் கொள்வனவு மனோபாவத்திலும் தொடர்ச்சியான அதிகரிப்பு காணப்படுகின்றது. இந்த மனோபாவத்தின் உச்ச பலனை வழங்கி இலங்கை இணைய வழி சந்தை சேவையில் பிரதான இடம் வகிப்பதே டராஸின் நோக்கமாகும்.

‘நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இணைய வழி ஊடுருவல் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த விடயத்தில் இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் சந்தையாகவே நாம் பார்க்கின்றோம். இலங்கை பற்றி எம்மிடம் பாரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. கய்மூ போன்ற உறுதியானதோர் முத்திரையுடன் நாம் இணைவதால் இந்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 100 வீத அசல் உற்பத்திகளுக்கான சிறந்த வாய்ப்பை டராஸ் பெற்றுக் கொடுக்கும். அத்தோடு பிரத்தியேகமான வாடிக்கையாளர் சேவையும் அமைந்திருக்கும்’ என்று கூறினார்.

டராஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் ஜொனதன் டொய்ர்.

இலங்கையில் டராஸின் வதிவிட முகாமையாளர் சௌராப் சவ்ஹான் ‘இலங்கையில் இணைய வழி சந்தையில் கய்மூ வெற்றிகரமாகச் செயற்படுகின்றது. டராசுடன் இணைவதால் இலங்கை இணைய சந்தையில் இது எமக்கு அளப்பரிய பங்கை அளிக்கும். உலகளாவிய ரீதியிலான பொருள்களை டராஸ் இலங்கைக்கு அறிமுகம் செய்யவுள்ளதால் எமக்கு வித்தியாசமான பெறுமதிமிக்க அனுபவத்தையும் அது வழங்கும். டராஸ் குழுமத்துடன் இணைந்து இலங்கையில் விரிவான இணைய மேடையில் பணியாற்ற நாம் ஆவலுடன் காத்திருக்கின்றோம்’ என்று கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right