மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பகுதியில் உள்ள வெற்றுக் காணியிலுள்ள கிணறு ஒன்றில் உருக்குலைந்த நிலையில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (20) மாலை மீட்டகப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர். 

பனிச்சையடி பண்ணை வீதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றின் கிணற்றில் இருந்து  துர்நாற்றம் வீசிய நிலையில் பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவதினமான இன்று மாலை 4 மணியளவில் குறித்த கிணற்றில்  உருக்குலைந்த நிலையல் ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஓப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்