சபாநாயகரை பார்த்து  நீங்கள் ஒரு பொய்யன் என குற்றஞ்சாட்டிய சஜித் - இது தான் காரணம் !

By T Yuwaraj

20 Apr, 2022 | 10:56 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி பதவி விலக தயார் என சபாநாயகருக்கு அறிவித்திருப்பதாக சமூகவலைத்தலங்களில் வெளியாகி  வரும் செய்திகளில் எந்த  வித உண்மையும் இல்லை.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நான் தெரிவித்த கருத்தை எதிர்க்கட்சி தலைவர்தவறான  முறையில் தெரிவித்திருந்தார் என சபாநாயகர் தெரிவித்ததை அடுத்து சஜித் பிரேமதாச  ,சபாநாயகரை பார்த்து  நீங்கள் ஒரு பொய்யன் என   குற்றம்சாட்டினார்.

பாராளுமனத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ரம்புக்கெனை பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,

பாராளுமன்றத்திலுள்ள அனைத்து க்கட்சித்தலைவர்களும் ஒன்றாக வந்து என்னை பதவி விலகுங்கள் எனக்கூறினால் தான் பதவி விலகத்தயார் என ஜனதிபதி கூறியுள்ளதாக சபாநாயகர் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். 

எனவே எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோருகின்றோம் என கூறியிருந்தார்.

பின்னர் மதிய நேரத்துக்கு பின்னர் சபாநாயகர் ஆசனத்துகுவந்த சபாநாயகர், இப்போது சமூக வலைத்தளங்களில் தான்  பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதியினால் சபாநாயகருக்கு கூறப்பட்டுள்ளதாக பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை.

கட்சி தலைவர் கூட்டத்தில் நான் தெரிவித்ருந்த கருத்தை காலையில் எதிர்க்கட்சி தலைவர்தவறான  முறையில் விளக்கி இருந்தார்.113 பேரின் ஆதரவைக்காட்டினால் அரசாங்கத்தை வழங்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி  கூறியதாகவே நான் தெரிவித்திருந்தேன். அது இன்றும் செல்லுபடியாகும். 113 பேரின் ஆதரவைக்காட்டுங்கள் .ஜனாதிபதிக்கு பதவி விலகுமாறு கூறுவதற்கு பாராளுமன்றத்தில் உள்ள  225 பேருக்கும் அதிகாரம் இல்லை என்பதனை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள் என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ''கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தினேஷ் குணவர்தனவுக்கு முன்னால் நான் இருந்தேன். அங்கு கூறியதை ,நீங்கள் இல்லை என்று கூறுவீர்களாக இருந்தால், நீங்கள் பொய் கூறுகின்றீர்கள் என்றே கூற வேண்டிவரும். நீங்கள் அதனை கூறினீர்கள். அப்போது நாங்களும் ஆச்சரியப்பட்டோம். நான் எதற்கு இந்த இடத்தில் பொய் சொல்ல வேண்டும். நீங்கள் கூறுவது முற்றிலும் பொய்யாகும்.  நீங்கள் வேண்டுமென்றால் அது உங்களால் தவறுதலாக கூறப்பட்டுவிட்டது என்று கூறுங்கள். நான் இந்த இடத்தில் முற்றுப்புள்ளி, காற்புள்ளி இன்றி நீங்கள் கூறியதனையே கூறினேன் என்றார்.

இதன்போது மீண்டும் குறுக்கிட்ட  சபாநாயகர், நீங்கள் தவறான வகையில் அர்த்தப்படுத்தியுள்ளீர்கள் என்றார்.

அதற்கு மீண்டும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், '' சபாநாயகரான நீங்கள் இப்படி பொய்களை கூற க் கூடாது அப்படியென்றால் சபாநாயகரான  நீங்கள் ஒரு பொய்யன்.'

 நீங்கள் கூறியதை அப்படியே நான் மீண்டும் கூறுகின்றேன். இந்த பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தால் ஜனாதிபதி பதவி விலகத் தயாராக இருக்கின்றார் என்றே கூறினீர்கள். அப்போது நேரத்தை ஒதுக்கித் தருமாறு நாங்கள் கேட்டோம். அப்படி கூறிவிட்டு எப்படி அதனை பொய் என்று கூற முடியும். நீங்கள் இந்த ஆசனத்தை அவமரியாதைக்கு உட்படுத்த வேண்டாம். நீங்கள் பெரும் பொய்காரன் என்று கூறுகின்றேன். நான் கூறியதை வாபஸ் பெற்றுக்கொள்ள மாட்டேன். அமைச்சர் தினேஷ் குணவர்தன  அப்போது இருந்தார். வேண்டுமென்றால் அவரை எழுந்து நான் கூறியது பொய் என்று கூறச் சொல்லுங்கள் பார்ப்போம் என  கேட்டுக்கொண்டார்.

ஆனால் அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் இருந்தபோதும் எந்த பதிலையும் வழங்காமல் மெளனமாக இருந்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தமாக போராட்டங்களுக்கு அழைத்துச்...

2022-10-05 16:29:29
news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54