மக்களுக்கு சேவை செய்வதே தலையாய கடமை – ரிஷாட் 

Published By: T Yuwaraj

20 Apr, 2022 | 10:46 PM
image

மக்களுக்கு சேவை செய்வதே எமது தலையாய கடமை என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்களை விசாரித்து தீர்ப்பை வழங்குமாறும் அமைச்சர் றிஷாட்  பதியுதீன் கடிதம் - Vanni News

ரம்புக்கனையில் செவ்வாய்க்கிழமை  (19) இடம்பெற்ற அசம்பாவித சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியதாவது,

"தங்களது எதிர்காலத்துக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்த இளைஞருக்கும், பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பொலிஸாரின் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவை நிறுத்தப்பட வேண்டும். அத்துடன், குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

குறித்த, மக்கள் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குறைந்தபட்ச படையணியினாலேயே ஓர் உயிர் காவுகொள்ளப்பட்டிருக்கின்றது என்றால், அதிகபட்ச படைகளை பயன்படுத்தி இருப்பின் என்ன நேர்ந்திருக்கும்?

ஆகையால், மேற்படி சம்பவத்தின் பின்புலத்தில் அரசியல் சக்திகள் இருந்தால், அதனையும் தீரவிசாரித்து, கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்று கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்!

2023-03-22 19:09:26
news-image

டெலிகொம், லங்கா வைத்தியசாலையை தனியார் மயப்படுத்துவதன்...

2023-03-22 13:56:33
news-image

நிதி முகாமைத்துவம், பொருளாதார சீர்திருத்தங்களில் இலங்கை...

2023-03-22 12:51:13
news-image

அரசாங்கம் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு எடுக்கும்...

2023-03-22 15:49:11
news-image

இலங்கை சாரணர் இயக்கத்தின் 106 ஆவது...

2023-03-22 19:09:55
news-image

இலங்கையர் என்ற வகையில் ஜனாதிபதியை பாராட்டுகிறேன்...

2023-03-22 19:10:20
news-image

சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்புக்கு சிறந்த...

2023-03-22 15:19:47
news-image

சர்வதேச நாணய நிதிய உதவியைப் பெற...

2023-03-22 14:18:13
news-image

இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த இலங்கை...

2023-03-22 17:14:15
news-image

ஹரக்கட்டா, குடு சலிந்து ஆகியோரின் பாதுகாப்பு...

2023-03-22 17:08:17
news-image

ஒருவரின் கையை வெட்டி தன்னுடன் எடுத்துச்...

2023-03-22 17:07:15
news-image

வெசாக் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக...

2023-03-22 16:56:47