ரம்புக்கனை சம்பவம் : பொலிஸாரின் பலப்பிரயோகம் குறித்து விசாரணை செய்ய குழு

Published By: Digital Desk 3

20 Apr, 2022 | 04:44 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்ட சிவிலியன்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட பலப் பிரயோகமா என்பது தொடர்பில் விசாரிக்க  மூவர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.  

சமூக பொலிஸ் இராஜாங்க அமைச்சின் செயலர்  எஸ்.ரி. கொடிகார தலைமையில் இந்த குழு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டயஸினால் அமைக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சின் செயலர் எஸ். ரி. கொடிகார தலைமையிலான இக்குழுவில்,  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர்  எம்.எஸ்.பி.  சூரியப்பெரும மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர்  மேஜர் ஜெனரால்  ஈ.எஸ். ஜயசிங்க ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இந்த குழுவானது,  ரம்புக்கனையில், ஆர்ப்பட்டத்தை கலைக்க பொலிஸார்  செய்த பலப் பிரயோகம் சட்ட ரீதியிலானதா என்பது தொடர்பில் ஆராயும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று முன் தினம்(19) ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது  நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தினால் காயமடைந்த 13 பேர் தொடர்ந்தும் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும்  மூவரின் நிலை கவவைக்கிடமாக உள்ளதென கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காயமடைந்த 15 பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:49:05
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47