நீதிபதி நடுவீதியில் சுட்டுக்கொலை ; சிசிடிவி காணொளி வெளியானது

By Raam

21 Oct, 2016 | 12:01 PM
image

மெக்ஸிக்கோவில் பெடரல் நீதிமன்ற நீதிபதி வீதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிக்கோவில் மேடேபேக் பிரதேசத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே 37 வயதான விசிண்டே பெர்முடேஸ் அன்டோனியோ சகாரியாஸ் என்ற நீதிபதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நீதிபதி வீதியில் வைத்து சுட்டு கொல்லப்படும் வீடியோ தற்போது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

விசிண்டே பெர்முடேஸ் அன்டோனியோ சகாரியாஸ் நாட்டில் இடம்பெற்று வந்த போதை பொருள் கடத்தில் தொடர்பான வழக்கு விசாரணைக்கென நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என மெக்ஸிக்கோ பிரதமர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right