கலைஞர்களின் படைப்புக்களை ஆவணப்படுத்த வேண்டும் - யாழ் அரசாங்க அதிபர் மகேசன்

20 Apr, 2022 | 03:36 PM
image

( எம்.நியூட்டன்)

கலைஞர்களின் படைப்புக்களை ஆவணப்படுத வேண்டும்  என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். 

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையின் பொதுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும், பண்பாட்டு பேரவையின் தலைவருமான கணபதிப்பிள்ளை மகேசன்  தலைமையில்   மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இதில்,  கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையின் மூலம் பல்வேறுபட்ட திறமைகளை கொண்டவர்களை முன்னேற்ற வேண்டும்.

 அத்தோடு இப் பேரவையானது கலைஞர்களின் பங்களிப்பின் ஊடாகவே உயிர்ப்புடன் இயங்க வேண்டும்.

 மேலும் கலைஞர்களின் படைப்புக்கள் ஆவணப்படுத்தல்களாக மேற்கொள்ள வேண்டுமெனவும் என்றார்.

மேலும், இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன், பண்பாட்டு பேரவையின் உப தலைவர் சோ.பத்மநாதன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.சுகுணலினி விஜயரத்தினம் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right