இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார் இங்கிலாந்து பிரதமர்

Published By: Digital Desk 5

20 Apr, 2022 | 03:13 PM
image

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், உக்ரைன் - ரஷ்ய போர் மற்றும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு மற்றும் இங்கிலாந்து - இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல விடயங்களில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்திய – ரஷ்ய உறவுகள் மற்றும் அமெரிக்காவின் ரஷ்ய எதிர்ப்பு விடயங்கள் உள்ளிட்டவை முக்கிய பேசு பொருளாக அமையும்.

மேலும் இங்கிலாந்து பெரும்பாலும் மென்மையான அழுத்தத்தை இந்தியாவிற்கு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் விசேடமாக கலந்துரையாடுவார்.

இங்கிலாந்து - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து விசேட அறிவிப்பொன்றை இந்த விஜயத்தின் போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17