தொடர்ச்சியாக எரிபொருளுக்கான விலையதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று நள்ளிரவு இந்தியன் எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு நிகராக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலையதிகரிப்பை மேற்கொண்டதை கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை ( 19 ) மாலை திருகோணமலையின் பல வீதிகளிலும் தடைகளை இட்டு பலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டி வீதியின் 4ஆம் கட்டை சந்தி, மட்டிகளி பிரதான வீதி, நிலாவெளி வீதியின் சிரிமாபுர, வரோதயநகர் போன்ற வீதிகளில் தடைகளைப் போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பசில் வெளியேறு,கோத்தா வெளியேறு, மகிந்த வெறியேறு என ஆர்பாட்டக்காரர்கள் கோஷமிட்டபடி பாதைகளை மறித்திருந்தனர். திடீரென மேற்படி போராட்டத்தை மேற்கொண்டதால் அப்பாதைகளில் பயணித்த பொதுமக்கள் மிகுதியாக சிரமத்தை எதிர்கொண்டனர்.