( எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியாக செயற்பட்ட, பயங்கரவாதி சஹ்ரான் ஹஸீம் பயன்படுத்திய வாகனம் பொலிஸாரால் இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சஹ்ரான் ஹஷீமின் வீ 8 ரக வாகனத்தை முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பயன்படுத்துவதாக ஊடகவியலாளர் ஒருவர் சமூக வலைத் தளத்தில் இட்ட பதிவொன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஊடாக இதனை அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அமைச்சர் சரத் வீரசேகர பயன்படுத்துவதாக கூறப்பட்ட டப்ளியூ.பி.சி.ஏ.எஸ். 1411 எனும் வீ 8 ரக வாகனம், கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரி மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட்டினுடையது எனவும் அது அரசுடமையாக்கப்பட்டு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
' இந்த டப்ளியூ.பி.சி.ஏ.எஸ். 1411 வாகனம், சி.ஐ.டி.யினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், கடந்த 2019 மே 13 ஆம் திகதி 2123/3 எனும் அதி விஷேட வர்த்தமானி ஊடாக அரசுடமையாக்கப்பட்டு, பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு வழங்கப்பட்டது. பொலிஸ் போக்குவரத்து பிரிவூடாக தற்போது இந்த வாகனம் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.' என பொலிசஸ் தலைமையகம் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM