(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
எரிபொருள் விலையினை குறைப்பதற்கும், தடையின்றிய வகையில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான யோசனையை எதிர்தரப்பினர் தாராளமாக முன்வைக்கலாம்.
எரிபொருள் விநியோக கட்டமைப்பினையும், மின்விநியோக கட்டமைப்பையும் சீராக முன்னெடுப்பதற்காகவே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும், லங்கா ஐ.ஓ.சி . நிறுவனமும் புதிய எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய செயற்பட எதிர்பார்க்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்திதுறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர சபையில் தெரிவித்தார்.
புதிய அமைச்சரவை பதவியேற்று 24 மணித்தியாலயத்திற்குள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதன் பின்னணி குறித்து எதிர்தரப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதை தொடர்ந்து பொது மக்கள் பாதிக்கப்பட்டு போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளமை அவதானிக்க முடிகிறது.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ள நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்காத காரணத்தினால் கூட்டுத்தாபனம் நாளாந்தம் 1.6 பில்லியன் நட்டத்தை எதிர்க்கொள்கிறது.
உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம்,டொலர் நெருக்கடி ஆகிய அடிப்படை காரணிகளினால் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எரிபொருள் மற்றும் மின்சார சேவை கட்டமைப்பை சீரான முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிட்டது.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எரிபொருளின் விலையை அதிகரிப்பதால் பொது மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள் என்பதை எம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது.
எரிபொருள் சேவை மற்றும் அதனுடன் ஒன்றினைந்த தொழிற்துறையினருக்கு நிவாணரம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும்,லங்கா ஐ.ஓ.சி.நிறுவனமும் ஒன்றினைந்து எதிர்வரும் காலங்களில் எரிபொருள் சூததிரத்திற்கமைய செயற்பட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை குறைப்பு,எரிபொருளை தடையின்றி விநியோகித்தல் குறித்து எதிர்தரப்பினர் வசம் சிறந்த யோசனை இருந்தால் அவர்கள் அதனை தாராளமாக முன்வைக்கலாம்.
எரிபொருள் விநியோகத்தில் காணப்படும் பிரச்சினை குறித்து உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM