(எம்.எம்.சில்வெஸ்டர்)
தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம் மற்றும் அவர்களின் தொழில் உரிமைகளை பெற்றுக்கொடுக்காவிடின் தொழில் திணைக்களத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
![]()
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதுபாண்டி ரமேஷ்வரன் உள்ளிட்ட இ.தொ.க.வின் முக்கியஸ்தர்களுக்கும் தொழில் திணைக்கள ஆணையாளர் பிரபாத் சந்திரசிறி உள்ளிட்ட தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று செவ்வாய்க்கிழமை (19) கொழும்பு, நாரஹேன்பிட்டியிலுள்ள தொழில் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது சில பெருந்தோட்ட கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத் தொகையான 1000 ரூபாவை செலுத்தத் தவறியுள்ளதுடன், அவர்களுக்கு கிடைக்கப்பட வேண்டிய தொழில் உரிமைகள் மற்றும் சலுகைகள் மறுக்கப்பட்டு வருவதாக இ.தொ.க. ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தது.
மேலும், இது சம்பந்தமாக பல தடவைகள் தொழில் திணைக்களத்திற்கு எழுத்து மூல ஆவணங்கள் சமர்ப்பித்திருந்த போதிலும், அவற்றுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் தட்டிக் கழித்து வருவதாகவும் இ.தொ.க. குற்றம் சுமத்தியது.
மேற்படி, பேச்சுவார்த்தையின் நிறைவில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இ.தொ.க. தலைவர் செந்தில் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,
"இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்த 1000 ரூபா சம்பளம் முழுமையாக தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. இதற்காக இன்று 500 தொழிலாளர்களது சம்பளம் சீட்டை கொண்டு வந்து தொழில் ஆணையாளரிடம் கையளித்தோம்.
எமக்கு முறையாக கிடைக்க வேண்டியதை கெஞ்சிக் கேட்ட வேண்டிய தேவையில்லை. எமக்கான உரிமைகளையே நாம் கேட்டு நிற்கிறோம். எமது உரிமைகளை நிலைநாட்டப்பட வேண்டும். எமக்கான உரிமைகள் முறையாக கிடைக்கப் பெறவில்லையெனின், தொழில் ஆணையாளர் மீது வழக்கு தொடர வேண்டி ஏற்படும் " என்றார்.
வழக்கு தொடர்வதற்கான சூழ்நிலைக்குச் செல்லத் தேவையில்லை எனவும், தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய 1000 ரூபா நாளாந்த சம்பளம் விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் ஆணையாளர் இந்த சந்திப்பின்போது தங்களிடம் உறுதியளித்ததாக குறிப்பிட்ட இ.தொ.க. தலைவர் செந்தில், 10 நாட்களுக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM