(எம்.ஆர்.எம். வசீம் , இராஜதுரை ஹஷான்)
நாடு பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள நிலையில் விமான கொள்வனவு குறித்து கவனம் செலுத்தப்படுகின்றமை வெட்கப்பட வேண்டும். சிறிலங்கன் விமான சேவை நிறுவனம் நட்டமடைந்துள்ள நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மற்றும் கோப் குழு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் விமான கொள்வனவிற்கு கவனம் செலுத்தியுள்ளமை தொடர்பில் முறையான விளக்கப்படுத்தலுக்காக சிறிலங்கன் விமான சேவை நிறுவனம் கோப்குழுவிற்கு அழைக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க, எரான் விக்கிரமரட்ண ஆகியோர் சபையில் கூட்டாக வலியுறுத்தினர்.
21 விமானங்கள் கொள்வனவு தொடர்பிலான விளக்கப்படுத்தலுக்காக ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் கோப்குழுவிற்கு முன்னிலையாகவுள்ளனர்.முழுமையான அறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் சபையில் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் 21 விமானங்களை ஒப்பந்த அடிப்படையில் கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளமை தொடர்பில் பாராளுமன்றில் பல்வேறு தரப்பினர் வாதங்களை முன்வைத்தனர்.
நாடு பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள வேளையில் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் 21 விமானங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளமை தொடர்பில் குறித்த நிறுவனம் பாராளுமன்றிற்கு பொறுப்புக் கூற வேண்டும்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டு நட்டமடைந்துள்ளது என கோப்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் விமான கொள்வனவு குறித்து கவனம் செலுத்து வெட்கப்பட வேண்டும்.
அரச நிதி தொடர்பிலான முழு அதிகாரத்தையும் பாராளுமன்றம் பொறுப்பேற்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
21 விமான கொள்வனவு தொடர்பிலான சர்ச்சைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டும்.ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் கோப் குழுவிற்கு இவ்வாரத்திற்குள் அழைக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரதிடம் வலியுறுத்தினார்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் தொடர்பிலான பாரதூரமான விடயங்களை கோப்குழு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
21 விமானங்கள் கொள்வனவு குறித்து தற்போது பரவலாக பேசப்படுகிறது.இவ்விடயம் குறித்து நேற்று (இன்று) அரச கணக்காளர் நாயகத்துடன் கலந்துரையாடலை மேற்கொண்டேன்.
ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழுவினர் இன்று கோப் குழுவிற்கு முன்னிலையாகவுள்ளனர்.21 விமானங்கள் கொள்வனவு தொடர்பிலான முழு அறிக்கைறை சபைக்கு சமர்ப்பிப்பேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM