எரிவாயு சிலிண்டரை வழங்கக் கோரி அட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட கொட்டகலை பிரதேச மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டனர். எரிவாயு சிலிண்டர்களை வீதியில் வைத்து எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு கோரினர்.
இதன் போது நுவரெலியா பகுதிக்கு கேஸ் எடுத்துச் சென்ற கேஸ் லொறியை மறித்து ஆர்ப்பாட்டகாரர்கள் கேஸ் வழங்க கோரி கோஷமிட்டனர். இதனையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
அந்த லொறியை சுற்றி வளைத்த ஆர்ப்பாட்டகாரர்கள் தமக்கு எரிவாயு விரைவில் விநியோகிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.
இதனையடுத்து திம்புள்ள – பத்தனை பொலிஸார் அங்கு விரைந்து கேஸ் லொறியில் இருந்த கேஸ் சிலிண்டர்களில் 60 கேஸ் சிலிண்டர்களை மாத்திரம் இறக்கி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு வழங்கினர்.
சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் நுவரெலிய – அட்டன் வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதேபோல் மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற வாகன சாரதிகளும் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் இணைந்துக் கொண்டமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM