சங்காவின் தலைமையில் களமிறங்கும் மஹேல

By Priyatharshan

21 Oct, 2016 | 10:08 AM
image

பாகிஸ்தான் சூப்பர் லீக் கராச்சி கிங்ஸ் அணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார இம்முறை பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடவுள்ளார்.

இந்நிலையில் கராச்சி கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரராகவும், அணியின் ஆலோசகராகவும். சங்கா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

குமார் சங்கக்காரவுடன் இலங்கை அணியின் மற்றுமொரு ஜாம்பவான் மஹேல ஜெயவர்தன, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயில், கிரேன் பொலார்ட், பாபர் அசிம், இங்கிலாந்து அணியின் ரவி போப்பரா, பாகிஸ்தான் அணியின் சொய்ப் மாலிக், மொகமட் அமீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right