(வத்துகாமம் நிருபர்)
கண்டி, மஹய்யாவ பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 21,000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபர் ஒருவரை 2 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் எரிபொருளைப் பெற்றுக் கொண்டிருந்த போது அவருடன் கூடவந்த மற்றொரு நபர் பெற்றோல் நிரப்பு நிலைய காசாளரின் பெட்டகத்தில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். நிரப்பு நிலையத்தில் காத்திருந்தவர்கள் சம்பவத்தை கண்டுள்ளனர்.
இதனை அடுத்து மோட்டார் சைக்கிள் உடன் வந்தவரை கைது செய்து விசாரித்ததில் தனது வீட்டுக்கு வேலைக்காக அந்நபரை அழைத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் சந்தேக நபர் 38 வயதுடைய கண்டி வித்தியார்த்த மாவத்தையில் வசிக்கும் ஒருவர் என இனம் காணப்பட்டதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அவர் வசம் 21,000 ரூபா பணமும் 2 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் இதற்கு முன்பும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைத்ததண்டனை அனுபவித்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
தனது 18 வயதிலிருந்தே போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கண்டி நீதவான் முன் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM