புதிய அரசியலமைப்புக்கு யோசனையை முன்வைக்கிறார் பிரதமர்

19 Apr, 2022 | 06:02 AM
image

(இராஜதுரை ஹஷான்)

சட்டவாக்கத்துறை,நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய முத்துறைகளின் சாதகமான காரணிகளை உள்ளடக்கிய வகையில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான யோசனையை புதிய அமைச்சரவையில் சமர்ப்பிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.

மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினர் முன்வைத்த யோசனைகளை கருத்திற்கொண்டு அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பிரதமர் அவதானம் செலுத்தியுள்ளார்.

திருத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியும் என பிரதமர் எதிர்பார்த்துள்ளதாக  பிரதமர் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இரத்து செய்து அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை திருத்தங்களுடன் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்கி 19ஆவது திருத்தத்தின் சிறந்த விடயங்களை உள்ளடக்கிய வகையில் 21ஆவது திருத்தத்தை விரைவாக கொண்டு வர வேண்டும் என அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் ஊடாக தனது அதிகாரங்களை குறைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் குற்றங்களால் சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள்...

2026-09-07 13:59:34
news-image

பல்கலைக்கழக பணியாளர் ஆட்சேர்ப்பை மாதாந்தம் மீளாய்வு...

2026-09-07 12:16:09
news-image

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவுக்கும்...

2026-09-07 19:12:32
news-image

எல் நினோவால் கடல்வாழ் பாலூட்டிகளின் உணவுப்...

2026-09-07 19:08:28
news-image

போலி உரிமைப் பத்திரம் மூலம் காணி...

2026-09-07 19:01:04
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அரசாங்கத்தின் எதிர்காலத்தை...

2026-09-07 18:57:01
news-image

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு நாடாளுமன்றம்...

2026-09-07 18:30:59
news-image

குருநாகலில் அரிய கடல்வாழ் உயிரின ஓடுகளை...

2026-09-07 17:40:40
news-image

'கொஸ் மல்லி'யின் மைத்துனரான 'பூத களுவா'...

2026-09-07 17:39:52
news-image

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சில கருத்துகள்...

2026-09-07 17:38:14
news-image

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு குறித்து ஐ.நா....

2026-09-07 17:17:59
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2026-09-07 17:36:25