(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு - காலி முகத்திடலில் 11 ஆவது நாளாகவும் இன்றைய தினமும் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.

நேற்றைய தினம் புதிய அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பிற்கு மத்தியிலும் இந்த ஆர்ப்பாட்டம் வலுவாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வண்ணமயமாக காட்சியளித்த ஜனாதிபதி செயலகம்
நேற்றுமுன்தினம் டிஜிட்டல் தொழிநுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி செயலக கட்டத்தொகுதியில் வெவ்வேறு காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டு வண்ணமயமாக காட்சியளித்தது.
இதன் போது 'போராட்டத்திற்கு வெற்றி என்ற வசனம் எழுதப்பட்ட போராட்ட புகைப்படங்கள் அடங்கிய விம்பமும் , கோட்டா கோ ஹோம் என்ற வசனங்கள் கொண்ட விம்பமும், 225 பேரும் வெளியேறுங்கள் என்று எழுதப்பட்ட விம்பமும் ஜனாதிபதி செயலக கட்டட தொகுதியில் திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறிருப்பினும் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் அதனை இடை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.










போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள உலகின் சிறந்த நடிகர்
அண்மையில் இங்கிலாந்தில் இடம்பெற்ற ஒலிவர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் உலகின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக் கொண்ட இலங்கையரான ஹிரான் அபேசேகர காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தார்.
இவ்வாறானதொரு விருதைப் பெற்றமை மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்ற போதிலும் , இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையில் தன்னால் அந்த மகிழ்ச்சியை உணர முடியாமலுள்ளதாகவும், அதன் காரணமாகவே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தான் இங்கு வருகை தந்தததாகவும் அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.
மெழுவர்த்தி ஏந்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்
நாட்டை நாம் வடக்கு கிழக்கு என்று பிரிக்கப் போவதில்லை. அதே போன்று சிங்களம் , தமிழ் என்றும் பிரிக்கப் போவதில்லை. மத அடிப்படையிலும் நாம் பிரியப் போவதில்லை என்று தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மெழுவர்த்தி ஏந்தி தமது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.







ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சைக்கிள் ஓட்ட போட்டியாளர்கள்
நாடளாவிய ரீதியிலுள்ள சைக்கிள் ஓட்ட போட்டி வீரர்களும் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சைக்கிளில் வருகை தந்த அவர்கள் காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர்களும் போராட்டத்தில் இணைந்தனர்
இதேவேளை நேற்றையதினம் ஊடகவியலாளர்களும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இணைந்துகொண்டதுடன் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதேவேளை, நேற்றையதினம் அமைச்சர்களின் பதவிப்பிரமாணத்திற்குப் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார்,
இனம், மதம், அரசியல் வேறுபாடின்றி நாட்டை நேசிக்கும் பெரும்பாலான மக்கள் தற்போதைய ஆட்சியின் தவறை திருத்தி நாட்டை கட்டியெழுப்ப விரும்புகிறார்களே தவிர நாட்டை தோல்வியடைய செய்வதற்கு அல்ல .ஆகவே ஜனநாயக போராட்டத்தை வன்முறை பாதையில் திசைத்திருப்பும் சந்தர்ப்பவாதிகளுக்கு இடமளிக்க வேண்டாம் என இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
அரசாங்கத்தின் தீர்மானங்களிலும் தவறு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். சர்வதேச நாணய நிதியத்தை ஆரம்பத்தில் நாடியிருக்க வேண்டும், விவசாயிகளுக்கு இரசாயன உரம் வழங்காதது தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
தவறுகளை திருத்திக்கொண்டு முன்னோக்கி சென்றால் மாத்திரமே மக்களின் நம்பிக்கையை மீள பெற முடியும். நாட்டு மக்களின் பணத்தை நான் திருடியதில்லை.அன்றும் இன்றும் என் கைகள் சுத்தமாகவே உள்ளன என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM