இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் நேற்று நள்ளிரவு (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது.
அதற்கமைய, ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 338 ரூபாவாகவும் ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை புதிய விலை 373 ரூபாவாகவும் விற்பனைசெய்யப்படவுள்ளது.
மேலும், லங்கா ஒட்டோ டீசலின் புதிய விலை 289 ரூபாவாகவும் லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 329 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை, கடந்த 17 ஆம் திகதி லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரித்திருந்தது. அது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 35 ரூபாவாலும் அனைத்து வகையான டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 75 ரூபாவாலும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எரிபொருள் விலைகளை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இல்லையென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க நேற்று தெரிவித்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM