வவுனியாவில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு

By T Yuwaraj

18 Apr, 2022 | 09:40 PM
image

வவுனியா கல்நாட்டினகுளம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து 10 வயது சிறுவனின் சடலம் இன்று (18) மீட்கப்பட்டது.

Articles Tagged Under: Death | Virakesari.lk

நேற்றையதினம் மாலை தனது வீட்டிலிருந்து வெளியில் சென்ற குறித்த சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமையினால் அவனது உறவினர்கள் தேடியுள்ளனர்.

இதன்போது குறித்த சிறுவன் வீட்டிற்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த சாந்தன் வயது 10 என்ற சிறுவனே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சடலத்தை மீட்ட பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right