மூதூரில் தந்தையை பொல்லால் தாக்கி கொன்ற மகன் கைது

Published By: Digital Desk 4

18 Apr, 2022 | 09:19 PM
image

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் - பாலத்தடிச்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் (59) வயதுடைய தந்தையை பொல்லொன்றில் தாக்கி (31) வயதுடைய மகன் கொலை செய்த சம்பவமொன்று நேற்றிரவு (17) பதிவாகியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை வீட்டிலுள்ள கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது மதுபோதையில் வந்த  மகன் தந்தையை பொல்லினால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மகனை சந்தேகத்தின் பேரில் மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளதோடு சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்லீம் பௌஸான் இன்று திங்கட்கிழமை (18) காலை விஜயம் செய்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு  சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் தந்தையை கொலை செய்த (31) வயதுடைய மகன் மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை  மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அலி சப்ரி - ஜெய்சங்கர் சந்திப்பு...

2023-09-26 17:04:48
news-image

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல் :...

2023-09-26 17:25:05
news-image

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைகளை...

2023-09-26 19:41:18
news-image

கருத்துச்சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் வலியுறுத்தியது பிரித்தானியா

2023-09-26 19:01:03
news-image

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை...

2023-09-26 20:04:20
news-image

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம் தேடிய...

2023-09-26 19:00:05
news-image

போரில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுச்சின்னம் :...

2023-09-26 17:10:33
news-image

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

2023-09-26 20:01:05
news-image

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர்...

2023-09-26 20:00:41
news-image

தளபாட விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து...

2023-09-26 17:04:11
news-image

திருடிய குற்றத்துக்காக எவரையும் தாக்க முடியாது...

2023-09-26 19:56:45
news-image

டியாகோகார்சியாவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளின்...

2023-09-26 16:45:18