மடத்தடியில் சூரசம்ஹாரம் , காத்தவராயன் நாட்டுக்கூத்து!

By Digital Desk 5

18 Apr, 2022 | 09:45 PM
image

வரலாற்றுப்பிரசித்திபெற்ற அருள்மிகு  மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் ஆவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட மஹா கும்பாபிஷேக குடமுழுக்குப்பெருவிழாவையொட்டி 1மணிநேர சூரசம்ஹாரம் காத்தவராயன் ஆகிய இரு வடமோடி நாட்டுக்கூத்துகள் நடைபெற்றன.

தம்பிலுவில் சிவபெருமான் தலைமையிலான  சிவா சிவா பஜனைக்குழுவினரும் விநாயகபுரம் கூத்துக்கலைஞர்களும் இணைந்து வீ.உதயகுமார் தலைமையில் இவ்விரு நாட்டுக்கூத்தை அரங்கேற்றினர்;

நாட்டுக்கூத்து நிகழ்வை ஆலயபரிபாலனசபைத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா முன்னிலையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி சிவஸ்ரீ பாலகுமாரக்குருக்கள் குததுவிளக்கேற்றி முறைப்படி ஆரம்பித்துவைத்தார்கள். 

1957ஆம் ஆண்டிற்கு பின்னர் இந் நாட்டுக்கூத்து நிகழ்வு இவ்வாலயத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டுக்கூத்துக்கலைஞர்கள் ஆலய பரிபாலனசபையினரால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right