பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளது -  பிரதமர் மஹிந்த 

Published By: Digital Desk 4

18 Apr, 2022 | 09:48 PM
image

 (இராஜதுரை ஹஷான்)

மக்களை முன்னிலைப்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் சூழ்ச்சி குறித்து பொது மக்கள் தெளிவுடன் அவதானம் செலுத்த வேண்டும்.சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினது சிறந்த ஆலோசனைகளை பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வுகாண  தயாராகவுள்ளோம் :பிரதமர் மஹிந்த | Virakesari.lk

இறந்த காலம் மற்றும் சட்டம் தொடர்பில் தெளிவில்லாமல் இளம் தலைமுறையினரை ஒன்றினைத்து ஜனாதிபதி,பிரதமர் உட்பட அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டால் அது நாட்டை மீண்டும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் என சட்டத்தரணிகள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் சட்டத்தரணிகளுக்கும்,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களினால் நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து இச்சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டது.

அரசியலமைப்பிற்கு அமைய ஜனாதிபதியை பதவி நீக்க முடியாது,.அரசியலமைப்பு தொடர்பில் தெளிவான விளக்கம் இன்மை,நாட்டு மக்கள் தற்போது எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி திட்டமிடப்பட்ட ஒரு தரப்பினர் தற்போதைய போராட்டங்களை முன்னெடுத்து செல்வதை சட்டத்தரணிகள் இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டினர்.

1988 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அப்போதைய அரச தலைவர் ஜே.ஆர் ஜெயவர்தனாவை கொலை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இறுதியில் முழு நாட்டிற்கும் பாரிய அழிவை ஏற்படுத்தியது.

இறந்த காலம் மற்றும் சட்டம் தொடர்பில் தெளிவில்லாமல் இளம் தலைமுறையினரை ஒன்றினைத்து ஜனாதிபதி,பிரதமர் உட்பட அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டால் அது நாட்டை மீண்டும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் நிலைமையை உருவாக்கும்.

மக்க சாதாரண மக்கள் தற்போதைய போராட்டங்களுக்கு நிதியுதவி மற்றும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை.

திட்டமிட்ட வகையில் ஒரு தரப்பினர் நிதியுதவி வழங்கி போராட்டத்தை தீவிரப்படுத்தி நாட்டை நிர்மூலமாக்க முயற்சிக்கின்றனர். நாட்டை அழிவிற்கு கொண்டு செல்லும் போராட்டங்களுக்கு ஊடகங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஆதரவு வழங்க கூடாது.தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.மக்கள் பிரநிதிகளின் சொத்துக்கள் கணக்காய்வு செய்யப்பட வேண்டும்.

ஒழுங்கமைக்கப்ட்ட கும்பல் பொது மக்களை கருவியாக பயன்படுத்தி அரசாங்கத்தை பலவீனப்படுத்தி,ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை பதவி நீக்கி அவர்களின் குறுகிய நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.உண்மை காரணிகளை நாட்டு மக்கள் தெளிவுடன் விளங்கிக்கொள்ள வேண்டும் என சட்டத்தரணிகள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளது.மக்களை முன்னிலைப்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் சூழ்ச்சி குறித்து பொது மக்கள் தெளிவுடன் அவதானம் செலுத்த வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை...

2024-12-10 17:18:53
news-image

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள்...

2024-12-10 17:27:40
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காட்டு யானை...

2024-12-10 16:54:35
news-image

மன்னாரில் இளையோரின் உரிமைகளை வென்றெடுக்க விழிப்புணர்வு...

2024-12-10 17:21:53
news-image

வவுனியாவில் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட...

2024-12-10 16:26:09
news-image

எல்ல பகுதியில் அதிகரிக்கும் வெளிநாட்டு, உள்நாட்டு...

2024-12-10 16:20:20
news-image

முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின் நடைபவனி !

2024-12-10 16:17:47
news-image

மோட்டார் சைக்கிளிலிருந்து வீழ்ந்த இளைஞன் வாகனம்...

2024-12-10 16:15:28
news-image

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தீர்ப்பு ஏனைய...

2024-12-10 15:47:00
news-image

கிளப் வசந்த படுகொலை ; 8...

2024-12-10 15:48:42
news-image

சகலருக்கும் குறைந்தபட்ச உணவுத்தேவை : உணவுக்...

2024-12-10 15:40:23
news-image

மக்கள் ஆணை எம் அனைவருக்கும் சமூகத்தின்...

2024-12-10 15:20:48