சதீஷ் கிருஷ்ணபிள்ளை

அந்த நாட்டில் வித்தியாசமான ஜனநாயகம் காணப்படுகிறது. அங்கு பாராளுமன்றம் உண்டு தான். அதை விடவும் பலமானவை இராணுவமும், புலனாய்வுச் சேவைகளும் தான். மக்கள் வாக்குகளால் ஆட்சிபீடத்திற்கு தெரிவாகலாம். தெரிவானாவர் எத்தனை காலம் நீடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி  பின்னைய இரண்டிற்கும் தான் உண்டு.

சொல்லப் போனால்ரூபவ் மக்கள் வாக்குகளால் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எவரும் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்ததாக சரித்திரம் கிடையாது. அவ்வாறானதொரு நாடு தான் பாகிஸ்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டும் மற்றொரு பலிக்கடாவாக நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலம் தோற்கடிக்கப்பட்டு வீடு செல்லும் பிரதமராக உள்ளார் இம்ரான் கான்.

இராணுவமும்ரூபவ் ஐ.எஸ்.ஐ. புலனாய்வுச் சேவையும் பிரத்தியேக ஸ்தாபனமாகக் கோலோச்சும் பாகிஸ்தானிய தேசத்தின் வித்தியாசமான ஜனநாயகத்தில்ரூபவ் இம்ரான் கானின் அரசியல் தந்திரோபாயங்கள் எடுபடவில்லை.

பாகிஸ்தான் மக்கள் மத்தியில் கிரிக்கெட் மூலம் கட்டியெழுப்பப்பட்ட வசீகரம். ஒக்ஸ்போர்ட்டில் கல்வி கற்ற பின்புலம், கறைபடிந்தவையாக மக்கள் கருதிய பூட்டோ குடும்பத்திற்கும், ஷெரீவ் குடும்பத்திற்கும் மாற்றாக அமையக்கூடிய நேர்மையாளன் என்ற தோற்றம்ரூபவ் 2018இல் பிரதமர் பதவிக்காக தேர்தலில் நின்றபோதுரூபவ் இவை எல்லாமுமே இம்ரான் கானுக்குத் துணை நின்றன.

அவர் ‘மாற்றம்’ பற்றி உறுதியாகப் பேசினார். ‘புதிய பாகிஸ்தான்’ பற்றிய நம்பிக்கையை ஊட்டினார். இதைத் தவிர, இராணுவமும், புலனாய்வுச் சேவைகளும் சேர்ந்த ‘ஸ்தாபனக் கட்டமைப்பின்’ நேரடி ஆதரவு அவருக்கு இருந்தது. அவர் தேர்தலில் போட்டியிட்டபோதுரூபவ் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நவாஸ் ஷெரீவ் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். நவாஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இம்ரான் கானின் போட்டியாளர்களுக்கு சார்பாக இயங்கிய ஊடகங்கள் முடக்கப்பட்டன. சில போட்டியாளர்கள் வேறு வழியின்றி இம்ரான் கானின் கட்சியுடன் கூட்டு சேர நிர்ப்பந்திக்கப்பட்டனர். இங்கு நவாஸ் ஷெரீப்பும் இராணுவத்தின் செல்லப்பிள்ளையாக அரசியலில் கால் பதித்தவர் தான். இருந்தபோதிலும்ரூபவ் ஒரு கட்டத்தில் இராணுவத்துடன் முரண்பட்டதால் அவர் சூசகமாக ஓரங்கட்டப்பட்டார்.

ஆட்சிபீடமேறியபோதுரூபவ் இம்ரான் கான் இராணுவத்தின் புகழ் பாடியதை மறக்க முடியாது. புல விடயங்களில் தமது கொள்கை இராணுவத்தின் கொள்கையுடன் ஒத்துப் போகிறது என்றார். ஒரு பிரதமராக ஆட்சி நிர்வாகத்தை சிறப்பாகக் இம்ரான் கான் செய்த காரியங்கள் சிறப்பானவை. அவர் சுகாதார காப்புறுதி முறையொன்றையும் அறிமுகம் செய்தார்.

இத்தகைய காரியங்கள் மூலம் தம்மை மக்கள் மத்தியில் ஈர்ப்பு மிக்க அரசியல் தலைவராக தமது தோற்றப்பாட்டை நிலைநிறுத்திக் கொண்டார்.இருந்தபோதிலும், இராணுவக் கட்டமைப்பிற்கும்,இம்ரான் கானின் அரசாங்கத்திற்கும் இடையில் நிலவிய உறவுகள் பற்றிய விமர்சனங்கள் இருந்தன.

அரசையோ,இராணுவ கட்டமைப்பையோ விமர்சித்தவர்கள் கடத்தப்பட்டனர் தண்டிக்கப்பட்டனர்.

இம்ரான் கானின் பதவிக்கு தலையிடியாக முதலில் வந்தவர் அவரது மனைவி தானென்ற பரவலான விமர்சனங்கள் உள்ளன. அவரது மனைவி பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் விவகாரத்தில் தலையீடு செய்தார்.

பாகிஸ்தானில் அதிக சனத்தொகையைக் கொண்ட மாநிலமான பஞ்சாபின் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட உஸ்மான் பஸ்தார் அரசியல் அனுபவம் அற்றவர். அவருக்கு போதிய கல்வித் தகைமைகளும் கிடையாது.

உஸ்மானைப் பதவி விலக்க வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்தன. இம்ரான் கான் அடிபணியவிலலை. இம்ரானின் மனைவிக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகம். உஸ்மானுக்கு ஏதோவொரு சக்தி இருப்பதாக மனைவி நம்பினார். உஸ்மானை விலக்கினால் இம்ரான் கானின் அரசு கவிழ்ந்து விடுமெனக் கருதினார்.

மனைவியின் சொல்லைக் கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் இம்ரானுக்கு ஏற்பட்டது. ஏன் உஸ்மானை விலக்க முடியவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவர் திணறினார்.

மறுபுறத்தில் கொரோனா நெருக்கடியின் வடிவில் வந்த துரதிருஷ்டமும் இம்ரான் கானைத் துரத்தியது. இந்த சூழ்நிலையை எதிர்க்கட்சிகள் இரு வழிகளில் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. இம்ரான் கான் இராணுவத்தின் ஆள் என்ற பிம்பத்தைக் கட்டமைக்கும் பிரசாரத்தை முன்னெடுத்தன.

குறிப்பாக இராணுவ தளபதி ஜெனரல் கமார் ஜாவிட் பாஜ்வாரூபவ் ஐ.எஸ்.ஐ. புலனாய்வுச் சேவையின் தலைவர்  லெப்ரினன் ஜெனரல் பாயிஸ் ஹமீட் ஆகியோரால் உருவாக்கப்பட்ட அரசியல்வாதியே இம்ரான் கான் என்ற பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்தன.

ஜெனரல் பாஜ்வாவிற்கும், லெப்ரினன் ஜெனரல் ஹமீதிற்கும் இடையிலான அதிகாரப் போராட்ட முறுகல் நிலையிலும் இம்ரான் கான் சிக்க நேர்ந்தது. அடுத்த இராணுவ தளபதியாக பதவியேற்கக்கூடிய லெப்ரினன் ஜெனரல் ஹமீதுரூபவ் அளவுக்கு அதிகமாக ஆட்சி நிர்வாகத்தில் மூக்கை நுழைக்கிறார் என்ற கோபம் ஜெனரல் பாஜ்வாவிற்கு இருந்தது.

இந்தக் கோபம் பொது நிகழ்வொன்றில் பகிரங்கமாக வெளிப்பட்ட சந்தர்ப்பமும் உண்டு. ஒரு கட்டத்தில் இராணுவ கட்டமைப்பு மாற வேண்டும் என்று ஜெனரல் பாஜ்வா கோரினார். புலனாய்வுச் சேவைக்கு புதிய தலைவரை நியமிக்குமாறு இம்ரான் கானிடம் வற்புறுத்தினார்.

இதனை இம்ரான் கான் ஆரம்பத்தில் ஏற்கவில்லை. தாம் மீண்டுமொரு தடவை தேர்தலில் போட்டியிட்டால் தம்மை வெற்றி பெற வைக்கும் ஆற்றல் லெப்ரினன் ஜெனரல் ஹமீதிற்கே உண்டென அவர் கருதினார்.

இது இராணுவத்திற்கும்ரூபவ் இம்ரான் கானின் அரசாங்கத்திற்கும் இடையிலான முறுகல் நிலையை பகிரங்கமாக வெளித்தெரியச் செய்தது.

இதனை எதிர்க்கட்சிகள் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற வியூகத்தை வகுத்தார்கள். இவர்களில் முக்கியமானவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப். தேசிய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர்.

முன்னைய சந்தர்ப்பங்களில்ரூபவ் நவாஸ் ஷெரீவ் பிரதமர் என்றால்ரூபவ் ஷெபாஸ் பஞ்சாப் மாநில முதலமைச்சர் என்பது எழுதாத விதி. இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அடுத்தபடியாக துணை நின்றவர்ரூபவ் பெனாஷிர் பூட்டோவின் கணவர் ஆசிவ் அலி சர்தாரி.

மூன்றாவதாக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் ஷெரீவ். இவர் ஒக்ஸ்போர்ட்டில் கல்வி கற்றவர். இந்தப் பெண்ணை முன்னாள் பிரதமர் பெனாஷிர் பூட்டோவுடன் ஒப்பிடுவது சமீபத்திய போக்காக மாறியிருக்கிறது.

இராணுவத்தின் துணையுடன்ரூபவ் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை வரையப்பட்ட சமயம் எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் பேதம் மறந்து கைகோர்த்தார்கள். அவரது கட்சி தலைமையிலான கூட்டணியில் இருந்து ஆதரவை விலக்கிக் கொண்டுரூபவ் வாக்கெடுப்பில் தோற்கடித்தார்கள்.

தமக்கு நேர்ந்த கதிக்கு அமெரிக்காவின் வெளிநாட்டு சதியே காரணம் என இம்ரான் கான் கூறினாலும் அது மிகைப்படுத்தப்பட்டதொன்றாகவே தோன்றுகிறது. ரஷ்யப் படைகள் உக்ரேனிய எல்லையைத் தாண்டிய நாளில் பாகிஸ்தான் பிரதமர் மொஸ்கோவில் இருந்தார். புட்டினுக்கு கைலாகு கொடுக்க மாத்திரமே இம்ரானால் முடிந்தது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்ற இராணுவ தளபதி ஜெனரல் பாஜ்வா கூறியதையும் நினைவுகூர வேண்டும். இம்ரான் கானை அமெரிக்கா தான் பதவியில் இருந்து தூக்கியெறிந்ததென நிரூபிப்பதற்கு இவ்விரு விடயங்கள் மாத்திரம் போதுமானவை அல்ல.

இம்ரான் கானின் கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளையும், அறுதிப் பெரும்பான்மையுடனான அரசாங்கத்தையும் நிர்வகிப்பதில், இராணுவத்திற்கொரு பங்கு இருந்தது. இந்த ஆதரவு இல்லாமல் போன சமயத்தில், அவரது வீழ்ச்சி இயல்பாகவே நிகழ்ந்திருக்கிறது.

இதற்குக் காரணம் இராணுவ கட்டமைப்பின் செல்வாக்கில் இருந்து பாகிஸ்தானின் ஜனநாயகம் தப்ப முடியாது என்பது தான். இதைத் தான்ரூபவ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு பிரதமரும் தமது ஆட்சி காலத்தைப் பூர்த்தி செய்ய முடியாமல் போன பாகிஸ்தானின் வரலாறு எமக்கு சொல்லித் தருகிறது.