எரிபொருள் விலையை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இல்லை - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

Published By: Digital Desk 3

18 Apr, 2022 | 05:29 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

எரிபொருள் விநியோகத்தால் இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனத்துக்கு தொடர்ந்தும் நட்டம் ஏற்படுகின்றபோதும் விலை அதிகரிப்பதற்கு இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றதா என வினவியதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருட்களின் விலையை மீண்டும் அதிகரித்திருக்கின்றது. டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதாலே இந்த விலை அதிகரிப்பு எற்பட்டிருக்கின்றது. 

அத்துடன் உலக சந்தையிலும் மசகு எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில்  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இதுவரை எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.

அத்துடன் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்திய கடன் திட்டத்தின் காரணமாக இலகுவாக எரிபொருளை இறக்குமதி செய்துகொள்ள முடியுமாகி இருக்கின்றது. 

அதேபோன்று டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால் கடந்த காலங்களில் செலுத்திய தொகையைவிட இரண்டு மடங்கு அதிகம் எரிபொருளுக்காக அன்னிய செலாவணியை செலுத்தவேண்டி இருக்கின்றது. 

மக்கள் தங்களது தேவைக்கு மாத்திரம் எரிபொருளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தால், தற்போதுள்ள நெருக்கடியை குறைக்கலாம்.

மேலும் விநியோகிக்கப்படும் ஒரு லீட்டர் பெற்றோலுக்கு 40 ரூபாவும் ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாவும் அதேபோன்று ஒரு லீட்டர் மண்ணெண்ணெய்க்காக 170 ரூபாவும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு நட்டம் எற்படுகின்றது. 

இந்த தொகை தற்போது மேலும் அதிகரித்திருக்கின்றது. இருந்தபோதும் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் எந்த தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25