வேடிக்கைக் குற்றச்சாட்டு

Published By: Digital Desk 5

18 Apr, 2022 | 05:27 PM
image

லத்தீப் பாரூக்

உக்ரேனில் போர் தொடுத்தமைக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை போர்க் குற்றவாளி எனக் கூறுகின்றார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்.   ஆனால் ராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா ஆகிய நாடுகளில் அமெரிக்கா இழைத்த போர்க் குற்றங்களையும், இஸ்ரேலின் போர்க் குற்றங்களை கண்மூடித்தனமாக ஆதரித்து வருகின்றமயை அவர் மறந்து விட்டாலும்,உலகம் நினைவில் கொண்டுள்ளது. ரஷ்ய தாக்குதல் காரணமாக உக்ரேனில் அதிகளவு மனித சடலங்கள் காட்சிபடுத்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

இவற்றைப் பார்த்து கவலையும் ஆத்திரமும் அடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி “ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒரு யுத்தக் குற்றவாளி” எனத் தெரிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் வாயில் இருந்து இவ்வாறான வார்த்தைகள் வெளியானமைஉலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பைடனின் முன்னோடிகளான ஜோர்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் மத்திய கிழக்கில் பல தசாப்தங்களாகப் புரிந்த யுத்தக் குற்றங்களை இப்போது பைடனே உலகுக்கு நினைவு படுத்தியுள்ளார். பராக் ஒபாமாவின் கீழ் உப ஜனாதிபதியாக இருந்த தானும் அந்தக் குற்றங்களின் ஒரு பங்காளி என்பதை அவர் மறந்து விட்டார்.

நியூயோர்க் மற்றும் வொஷிங்டன் ஆகிய இடங்களில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்ரூபவ் அல்குவைதா மீது குற்றம் சாட்டி ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. 20 வருடங்களுக்கு மேலாக ரஷ்யாவால் சீரழித்து சின்னாபின்னமாக்கப்பட்ட ஆப்கானிஸ்தானை அமெரிக்கா வேட்டையாடியது.

அதேபோன்று எண்ணெய் வளம் மிக்க ரூடவ்ராக்ரூபவ் லிபியா மற்றும் சிரியா என்பன ஏற்கனவே பெரும்பாலும் அபிவிருத்தி அடைந்த நாடுகளாக இருந்தன.  அந்த நாடுகளின் மீது அமெரிக்கா தொடுத்த யுத்தங்கள் மற்றும் தாக்குதல்கள் காரணமாகதற்போது அவை கொலைகளங்களாக மாற்றப்பட்டுள்ளன.

2003 மார்ச்சில் ஜோர்ஜ் புஷ் ஜுனியர் ரூடவ்ராக் பாரிய அழிவு தரும் ஆயுதங்களைக் கொண்டிருப்பதாகக் கூறி மீண்டும் அந்த நாட்டை பதம் பார்த்தார்.அவ்வாறான எந்த ஆயுதங்களும் ஈராக்கிடம் இருக்கவில்லை என்பதை ஐக்கிய நாடுகள் ஆயுதப் பரிசோதகர்கள் பின்னர் நிரூபித்தனர். அதற்கிடையில் ஈராக்கின் பெறுமதி மிக்க சொத்துக்களையும், விலைமதிப்பற்ற பண்டைய நினைவுப் பொருள்களையும் அமெரிக்கா சூறையாடியது.

 பிரித்தானிய அரசியல்வாதி ஜோர்ஜ் கெலோவே இது பற்றிக் குறிப்பிடுகையில் “அமெரிக்கா 27 இலட்சம்  ஈராக்கியர்களைக் கொன்று குவித்தது. மிகவும் திட்டமிடப்பட்ட அடிப்படையில் அந்தமக்களுக்கான தண்ணீர், மின்சாரம், உணவு, மருந்து என்று எல்லா அடிப்படைவிநியோகங்களும் நிறுத்தப்பட்டன. அப்பாவி ஈராக் மக்கள்புஷ்ஷூம் மீது அன்றைய பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயரும் வேண்டுமென்றே இனப்படுகொலை புரிந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

“அத்தோடு அவர்கள் நிறுத்த வில்லை எண்ணிலடங்காத ஈராக்கிய ஆண்களும் பெண்களும் இளவயதினரும் சிறைகளிலும் வதை முகாம்களிலும் அடைக்கப்பட்டு மனிதாபிமானமற்ற விதத்தில் சித்திரவதை செய்யப்பட்டனர். மனித வரலாற்றில் இடம்பெற்ற மிகக்கொடூரமான சித்திரவதைகள் இவை தான்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மன்னன் பாரோ,அதன் பிறகு ஹிட்லர் மற்றும் முசோலினி ஆகியோர் காலத்தில் கூட இவ்வாறான சித்திரவதைகள் இடம்பெறவில்லை எனவும் ஈராக்கில் அமெரிக்கா புரிந்த சித்திரவதைகள் அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் அமைந்துள்ளன என்றும் துருக்கிய பாராளுமன்றத்தின் மனித உரிமை குழு தெரிவித்துள்ளது.

இவற்றுக்கெல்லாம் காரணமான ஜோர்ஜ் புஷ்ஷூம் பிளேயரும் இன்னமும் சுதந்திர மனிதர்களாக வாழுகின்றனர். சர்வதேச நீதியும் நியாயமும் எங்கே? இவ்வாறு தான் அமெரிக்காவும் அதன் தலைமையிலான நேட்டோ அணியும் எண்ணெய் வளம் மிக்க லிபியாவை துவம்சம் செய்தன. அப்போது லிபியா மீது நடத்தப்பட்ட தாக்குதலை அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் கூட்டாக இணைந்து புரிந்த வரலாற்றின் மத்தியகால சிலுவைப் போர்” என்’று அப்போது ரஷ்ய ஜனாதிபதி புட்டின் வர்ணித்தார்.

69 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட லிபியா தனது தேசிய கருவூலத்தில் 105 பில்லியன் டொலர்கள் பெறுமதியான வெளிநாட்டு ஒதுக்கைக் கொண்டிருந்தது.இந்நிலையில் அந்த நாட்டின் மீது படை எடுத்தவர்கள் முழுமையாக இதைக் கொள்ளையடித்தனர். 

அமெரிக்காவின் நாசகார இராணுவ ஆக்கிரமிப்பால் அவர்களுக்கு உலகளாவிய  ரீதியில் ஏற்பட்ட எதிர்ப்பை நன்கு புரிந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஸியை முன்னிலைப் படுத்தி அழிவுகளையும் நாசங்களையும் விளைவித்தார்.

அமெரிக்காவும் நேட்டோவும் மத்திய தரைப் பிரதேசத்தில் இராணுவத் தளங்களை நிறுவி அங்கிருந்து ஆபிரிக்காவுக்குள் ஊடுருவின.இதனால் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர நேர்ந்தது. அதற்காக லிபியாவில் இருந்து எந்தப் பாதுகாப்பும் அற்ற படகுப் பயணங்களை அவர்கள் தெரிவு செய்தனர்.

பராக் ஒபாமாவின் கீழ் உப ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் இந்தக் குற்றங்கள் எல்லாவற்றினதும் தீவிர பங்காளியாக இருந்துள்ளார். இந்தக் குழப்பங்களின் நடுவே தான் அடக்கி ஒடுக்கப்பட்ட ஷரியா மக்களும் சுதந்திரத்தையும் சமாதானத்தையும் வேண்டி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அன்று சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளர் பஷர் அல் அஸாத் தனது துருப்புக்களை ஏவி அந்த மக்களை அடக்க முயன்றார்.

மேற்குலக நாடுகளினதும் இஸ்ரேல், ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளின் ஆதரவுடனும் பஷர் அல் அஸாத்துக்கு தனது பிரஜைகளைக் கொன்று அழிக்க போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த மனிதப் படுகொலைகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பது போல் மேற்குலக நாடுகள் பாசாங்கு செய்தனவே தவிர உருப்படியாக எதையும் செய்யவில்லை.

தற்போது சிரியா என்பது இடிக்கப்பட்ட கட்டிடங்களின் எச்சங்களையும்,நாசமாக்கப்பட்ட உட்கட்டமைப்பையும் கொண்ட ஒரு பாரிய சுடுகாடவே காணப்படுகின்றது. இதேவேளை மேற்குலக நாடுகளும் இஸ்ரேலும் தமது கைக்கூலிகளான சவூதி ஆட்சியாளர்களை ஏவிவிட்டு உலகின் மிகவும் பழமையான நாடுகளில் ஒன்றான யெமன் தேசத்தின் மீதும் குண்டு வீசி நாசமாக்கி வருகின்றனர். இதுவரை இந்த மோதல்களில் மூன்று இலட்சம் பேர் மட்டில் கொல்லப்பட்டுள்ளனர். உலக வரலாற்றில் மிக மோசமான மனிதப் பேரவலம் இங்கு ஏற்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் காரணமான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தலைவர்களில் எவராவது ஒருவர் மீதாவது விசாரணைகள் இடம்பற்றுள்ளனவா? அவர்கள் மிகவும் சுதந்திரமாக தமது எஞ்சிய வாழ்நாளை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களின் வெறித்தனத்துக்குப் பலியான அப்பாவி மக்கள் இன்னமும் இயல்பு வாழ்வுக்கு திரும்ப முடியாது அல்லல்படுகன்றனர். இந்த நிலையில் ஜனாதிபதி பைடன்ரூபவ் ஜனாதிபதி புட்டினை விசாரிக்க வேண்டும் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாரம்பரிய கட்சிகளை தண்டித்த வாக்காளர்கள்

2024-10-06 19:15:50
news-image

பேராபத்துக்குள் தமிழ்த் தேசியம்

2024-10-06 17:14:44
news-image

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்ட முக்கிய...

2024-10-06 17:17:35
news-image

தமிழ் அரசுக் கட்சியுடன் பயணிப்பதில் அர்த்தமில்லை...

2024-10-06 18:31:52
news-image

தமிழ் மக்களுக்கான அரசியல் நியாயப்படுத்தலும் தீர்வுகளும்

2024-10-06 18:42:06
news-image

புதிய ஆட்சியில் புத்துயிர் பெறுமா வடக்கு...

2024-10-06 15:55:39
news-image

இந்திய அணுகுமுறை மாறுகிறதா?

2024-10-06 16:02:59
news-image

அநுரவைக் கையாளும் சீனா

2024-10-06 16:09:55
news-image

இலங்கை அரசியலில் தலைவரும் செயலாளரும்

2024-10-06 13:27:16
news-image

ஜனாதிபதிகள் வரலாம் போகலாம்; ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஜனாதிபதி...

2024-10-05 12:29:13
news-image

தனியார் கடன் அதிகரிப்பினால் வளர்ச்சியடையும் பொருளாதாரம்

2024-10-04 16:15:59
news-image

தென்னிலங்கையுடன் இணையும் புதிய அரசியலை நோக்கி...

2024-10-03 20:30:56