வெளிநாட்டவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் வரை போராட்டம் தொடர வேண்டும் - சந்திமா விஜேகுணவர்த்தன

18 Apr, 2022 | 05:11 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

காலி முகத்திடலில் மேற்கொள்ளப்படும் இளைஞர்களின் போராட்டம் அரசியலில் மாற்றம் ஏற்படுவதற்கு மாத்திரம் அமையாமல் வெளிநாட்டவர்களிடமிருந்து எமது நாட்டை பாதுகாத்துக் கொள்ளும் வரை இடம்பெற வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் எமது நாட்டின் பொருளாதார மேலும் வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாது என  ஸ்ரீலங்கா மனிதனேய கட்சியின் தலைவி பேராசிரியை சந்திமா விஜேகுணவர்த்தான தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பாக  கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆட்சியில் இருக்கும் அரசுக்கு எதிராக இளைஞர்கள் ஒன்றுபட்டு கொழும்பு காலி முகத்திடலில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசியல்வாதிகளால் நாடு தொடர்ந்து வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்வதை தாங்கிக்கொள்ள முடியாமலே இளைஞர்கள் வீதிக்கிறங்கி இருக்கின்றனர்.  

ஆய்வாளர் என்றவகையில் இவர்களின் போராட்டத்தை உலகில் ஏனைய நாடுகளில் வரலாற்றில் இடம்பெற்ற போராட்டங்களுடன் ஆய்வு செய்து பார்க்கும்போது, உலகில் எந்த நாட்டினதும் அரசியல் நிலைமையை இலங்கை அரசியல் நிலைமையுடன் சமப்படுத்த முடியாமல் இருக்கின்றது.

ஏனெனில் எமது தேவையான மின்சாரம், உணவுவகைகள், மருந்து பொருட்களை உற்பத்தி செய்வதற்கு முடியுமான வளம் எமது நாட்டில் இருக்கி்ன்றபோதும்.

அதனை உற்பத்தி செய்ய முடியாமல் போயிருக்கின்றது. இதற்காகவே நாங்கள் போராடவேண்டும். உலக நாடுகளில் மிகவும் வளம் மிக்க பூமி எமது பூமியாகும். 

அதனால்தான் சர்வதேச நாடுகள் எமது நாட்டின் வளங்களை பெற்றுக்கொள்வதற்கு திட்டமிட்டு செயற்படுகின்றன. நாட்டை ஆட்சி செய்துவந்த அரச தலைவர்களும் சர்வதேசத்தின் கைப்பொம்மையாகவே செயற்படுகின்றனர். 

அதனால் நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை தடுப்பதற்கும் எமக்கு தேவையான உற்பத்திகளை எமது நாட்டுக்குள்ளேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை  எடுக்கும்வரை நாங்கள் போராடவேண்டும். இளைஞர்களின் போராட்டம் எமது நாட்டை பாதுகாத்துக்கொள்ளும்வரை இடம்பெறவேண்டும். 

அதற்காக எமது ஆதரவு தொடர்ந்து இருக்கின்றது. அவ்வாறு இல்லாமல் அரசியல் ரீதியில் மாத்திரம் மாற்றம் ஏற்படுத்த போராடுவதால் நாட்டை பாதுகாக்க முடியாது. இதனால் எமது நாடு இன்னும் பொருளாதார ரீதியில் பாதிப்படையும்.

எமது பொருளதாாரம் வீழ்ச்சியடைய வேண்டும் என்பதே எமது நாட்டை கொள்ளையடிப்பதற்கு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டவர்களின் எதிர்பார்ப்பாகும்.  அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு நாங்கள் முற்படக்கூடாது. 

அதனால் அரசியல்வாதிகளுக்கு தேவையான முறையில் நாட்டை நிர்வகிக்கும் முறைமையை இல்லாமலாக்குவதற்கும் எமக்கு தேவையான உற்பத்திகளை நாங்களே உற்பத்தி செய்துகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அவ்வாறான தீர்மானம் ஒன்றுக்கு வரும் வரை போராடவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33