பாடசாலைகள் இன்று ஆரம்பம்

18 Apr, 2022 | 05:21 AM
image

  

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியிலுள்ள சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இவ்வாண்டுக்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. 

எவ்வாறிருப்பினும் இன்று முதல் பாடசாலை நேரத்தினை ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய கல்வி அமைச்சினால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்திற்கமைய சகல சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும். 

மே மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் காரணமாக விடுமுறை வழங்கப்படும்.

இதே வேளை முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட  தவணை செயற்பாடுகள் ஜூன் மாதம் 6 ஆம் திகதி முதல் ஜூலை 8 ஆம் திகதி வரை இடம்பெறும். 

அத்தோடு  ஜூலை 9 ஆம் திகதி முதல் ஜூலை 17 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும். 

மேலும் இவ்வாண்டுக்கான இரண்டாம் தவணை கல்வி செயற்பாடுகள் ஜூலை 18 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெறும்.

இவ்வாண்டுக்கான மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் செப்டெம்பர் 19 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை இடம்பெறும்.

அதற்கமைய ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் காரணமாக விடுமுறை வழங்கப்படும்.

அத்தோடு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் நவம்பர் 14 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை இடம்பெறும்.

இதே போன்று நாடளாவிய ரீதியிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் இவ்வாண்டுக்கான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் மே மாதம் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இடம்பெறும். 

மே மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சைகள்  காரணமாக விடுமுறை வழங்கப்படும். 

முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள்  ஜூன் 6 ஆம் திகதி முதல் ஜூலை 8 ஆம் திகதி வரை இடம்பெறும்.

முஸ்லிம் பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி செயற்பாடுகள் ஜூலை 18 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெறும். 

முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் செப்டெம்பர் 19 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை இடம்பெறும்.

 அதற்கமைய ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும். மூன்றாம் தவணையின் இரண்டாம்கட்ட கல்வி செயற்பாடுகள் ஒக்டோபர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை இடம்பெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹோமாகமவில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன்...

2026-07-18 13:12:46
news-image

10 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத்...

2026-07-18 13:11:53
news-image

பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால்...

2026-07-18 13:09:43
news-image

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் ஆசி பெற்றார்...

2026-07-18 12:34:33
news-image

நாட்டின் பல மாவட்டங்களில் பலத்த காற்று...

2026-07-18 12:23:27
news-image

25 ஆண்டுகள் பழமையான கொலை வழக்கு...

2026-07-18 11:44:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை...

2026-07-18 11:07:56
news-image

பெண்களின் திறன்களை வெளிக்கொணர்வதில் CCWE வழங்கும்...

2026-07-18 11:09:56
news-image

வவுனியாவில் விபத்து: நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன்...

2026-07-18 10:00:56
news-image

உடலுக்குள் போதைப்பொருள் மாத்திரைகளை மறைத்து கடத்தி...

2026-07-18 09:44:20
news-image

அலவத்துகொடையில் மண் மேடு இடிந்து விழுந்து...

2026-07-18 08:43:27
news-image

இன்றைய வானிலை 

2026-07-18 06:33:05