இராஜதந்திரக் கருவியாகும் பொருளாதாரம்

17 Apr, 2022 | 08:33 AM
image

லோகன் பரமசாமி

சர்வதேச அரசியலில் பொருளாதாரம் ஒரு முக்கிய இராஜதந்திர கருவியாக உருவாகி வருகிறது.

தெற்காசிய நாடுகளிலும் தென் கிழக்காசிய நாடுகளிலும் பசுபிக் தீவுகளிலும் பொருளாதாரம் இராஜதந்திர கருவியாக உபயோகிக்கப்படும் நிலை அதிகரித்துள்ளது. இதன் மூலம் சீனாவின் கடன் பொருளாதார பொறிக்குள் சிக்குண்டுள்ள நாடுகளை அமெரிக்கா தன் வசம் ரூடவ்ர்க்கும் முன் முயற்சிகள் படிப்படியாக நடைபெறவுள்ளது.

கடந்த வருடங்களில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக உற்பத்தி இழப்பு, உல்லாச பயணிகள் வருகை இழப்பு, ஏற்றுமதி வருவாய் இழப்பு உள்நாட்டு நுகர்வு வீழ்ச்சி ஆகியன காரணமாக சிறிய நாடுகள் மிகப்பாரிய பின்னடைவைச் சந்தித்த வருகின்றன. இந்தோ, பசுபிக் பிராந்திய நாடுகளான இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் பொருளாதார இழப்பால் மிகப்பாரிய அரசியல் ஸ்திரமற்ற நிலைமைகளைக் கொண்டுள்ளன.

இந்தப் பிராந்திய நாடுகள் பலவும் சீனாவிடம் கடன் பெற்று கொண்ட நாடுகளாக இருக்கிண்றன. இந்தகக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நெருக்கடியான நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் ‘இந்தோ, பசுபிக் நாடுகளின் பொருளாதார கட்டமைப்பு’ என்ற அமைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

நான்கு பிரதான தூண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பொருளாதாரக் கட்டமைப்பு மிக விரைவில் இந்தோ, பசுபிக் நாடுகளில் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.

இந்த நான்கு முக்கிய தூண்களில் முதலாவதாக நியாயமான நெகிழ்வான வர்த்தகம் கடைப்பிடிக்கப்படுதலாகும். இந்த வர்த்தகம் பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்படுவதுடன் தொழிலாளர்கள், சூழல் பாதுகாப்பு ரூபவ்டிஜிட்டல் மயப்படுத்தல் ஆகிய விடயங்கள் பிரதானமாக கருத்தில் கொள்ளப்படவுள்ளன.

இரண்டாவதாக நெகிழ்ச்சி தன்மை கொண்ட விநியோக சங்கிலிகளை உருவாக்குதலாகும். இதில் கடல், மற்றும் வான் வழி போக்குவரத்துக்களை இலகுபடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் காணப்படுகின்றன. 

மூன்றாவதாக கட்டுமானங்களை உருவாக்குதலாகும். தூய சக்கதிவளத்தை உருவாக்குதல், கரியமிலவாயு அற்ற நிலையை உருவாக்குதல் என்பன காணப்படுகின்றன.

நான்காவதாக வரி, விதிப்பு குறித்த ஆலோசனைகளும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த விவகாரங்களிலும் முக்கிய கவனம் செலுத்துதல் ஆகிய விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இப்புதிய கட்டமைப்பும் அதன் ஆதரவு நாடுகளும் நம்பகரமான நீடித்த காலத்திற்கு அமெரிக்க வணிக நலன்களுக்கு ஆதரவாக இந்தோரூபவ்பசுபிக் பிராந்தியத்தை உருவாக்கதல் என்ற நோக்குடன் தமது நகர்வுகளை செய்யவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகர்வுகள் அடிப்படையில் ஏற்கனவே சர்வதேச நடைமுறையில் இருந்துவரும் அமெரிக்க புரிந்துணர்வு உடன்படிக்கையை ஒத்ததாக இருக்கிறது. இந்தோ, பசுபிக் பிராந்திய நாடுகள் என்ற வகையில் பொருளாதார முன்னேற்றங்களை கண்டுள்ள நாடுகளான ஜப்பான், தென்கொரியக்குடியரசு, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றுடன் சிங்கப்பூர் ஆகியனவும் இந்தத் திட்டத்தில் இணைந்த கொள்ளவுள்ளன.

வழமை போலான அமெரிக்க சார்பு நாடுகளை தவிர புதிதாக இந்தோ, பசுபிக் பிராந்தியத்தில் மேலும் பல சிறிய நாடுகளை அமெரிக்கா தமது திட்டத்துடன் புரிந்துணர்வு கொண்ட நாடுகளாக மாற்றுவதே பிரதான குறிக்கோளாகும் இதிலே ஆசியான் நாடுகளும் கூட இணைந்து கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க, சீன போட்டியின் ஆரம்பகாலங்களில் உலகில் வொஷிங்டன் புரிந்துணர்வு நாடுகள் பீஜிங் புரிந்தணர்வு நாடுகள் என்று இருதரப்பாக போட்டிகள் இடம்பெற்று வந்தன.

ஆனால் சிறிய நாடுகளை கையாள்வதில் மனித உரிமைகள் விவகாரம், இஸ்லாமிய பயங்கரவாதம், சுகாதார விவகாரம் என்று பிரதான கருவிகளாக பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் தற்பொழுது பொருளாதாரம் நாடுகளின் தேவையில் முன்னுரிமை வகிக்கிறது. அந்த வகையில் சீனப் பொருளாதார தலைமைத்துவத்தை கையாளும் வகையில் பொருளாதாரம் ஒரு கருவியாக பயன்படுத்தப்படவுள்ளது.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற நிதிக் கடன் வழங்கும் சர்வதேச நிறுவனங்கள் தமது நிதி உதவிகளை பல நாடுகளுக்கும் வழங்கும் செயற்பாடுகளை சற்று தாமதப்படுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்குப் பதிலீடாக அமெரிக்கா நேரடியாக நிதி முதலீட்டு உதவிகளை தன்வசம் வைத்திருப்பதன் வாயிலாக மீண்டும் வொஷிங்டன் புரிந்துணர்வை நடைமுறைக்கு கொண்ட வரவுள்ளதாக தெரிகிறது.

இதன்மூலம் பரவலான நாடுகளை அமெரிக்கா தன் வசப்படுத்தி கொள்வதே அடிப்படை நோக்கமாக உள்ளது. இலங்கை போன்ற நாடுகள் தற்பொழுது அனுபவித்து வரும் மிகக் கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு முதற்காரணமாக காணப்படுவது ஊழல், மோசடிகள் என்பதை மேலை நாடுகள் நன்கறிந்துள்ளன.

இருந்தும் சர்வதேச அரங்கில் அமெரிக்கா தனது தலைமைத்துவத்தை முன் நிறுத்தி கொள்வதை மையமாக கொண்டு தற்போதைய செயற்றிட்டத்தினை முன்னெடுக்கும் முயற்சியில் ரூடவ்டுபடுகிறது. அதாவது அமெரிக்க பொருளாதார கையாள்கைத் திட்டத்திற்கு அர்த்தம் மிக்க உறுதிப்பாடான ஒத்துழைப்பை அமெரிக்கா எதிர்பார்க்க வேண்டி ஏற்படும். இதற்கு மையப்படுத்தப்பட்ட சர்வதேச கண்காணிப்பு உருவாக்கப்படவுள்ளது. இதுவும் சிறிய நாடுகளுடுனான பல்வேறு முரண்பாடுகளையும் உள்ளகத் தலையீடுகளையும் உருவாக்குவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்த பொருளாதார கையாள்கை மென்மைப்படுத்தப்பட்ட அமெரிக்க கையாள்கை போல் தோன்றினாலும் எவ்வாறு வலிமை மிக்கதாக இருக்கப்போகிறது என்பது கேள்வியாகும்.

ஏனெனில் தற்போதைய உலக நிலைமையான உக்ரேன் மீதான ரஷ்ய படை எடுப்பானது உலகின் செல்வந்த நாடுகளில் பொருட்களின் விலை ஏற்றம்ரூபவ் சிறிய தேசங்களில் பொருளாதார பின்னடைவு, இந்து சமுத்தி பிராந்தியம் இராணுவ மயப்படுத்தப்படுதல் ஆகிய அனைத்தும் சர்வதேச அரங்கல் சீனாவின் எழுச்சியால் உருவானதே என்பது அமெரிக்கவின் பார்வையாக உள்ளது.

சர்வதேச நெறிமுறைகள் சார்ந்த முன்னேற்றத்தில் ஆர்வம் கொள்ளாது பொருளாதார வளச்சியில் மட்டும் முக்கிய கவனம் செலுத்தி வரும் சீனாவிடமிருந்து தொடர்ச்சியாக அமெரிக்கா தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. இந்த விடயம் தற்போது விவாதமாகியும் உள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு அவுஸ்திரேலியா, பிரித்தானியா, அமெரிக்கா இணைந்த ‘ஒக்கஸ்’ அமைப்பின் சார்பில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் முன்முயற்சிகள் குறித்த அறிக்கைகள் வெளிவந்துள்ளன. இந்த முன்முயற்சி முற்ற முழுதாக இந்தோ, பசுபிக் இராணுவமயமாக்கல் குறித்தது. ஆக வருங்காலம் மேலும் பல யுத்தங்களை உலகில் உருவாக்கும் தன்மையையே வெளிப்படுத்துவதாக உள்ளது.

எனவே தற்போதைய நிலையில் பொருளாதார ரீதியாக சிறிய நாடுகளை தம் வசப்படுத்தும் நிலையானது மிகவும் அடிப்படையானதாகவே நோக்க வேண்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிறைவேறாமல் போன புத்தாண்டு கனவு : ...

2024-04-11 17:06:23
news-image

நாட்டில் பெண்களை அச்சுறுத்தும் 'மாதவிடாய் வறுமை'...

2024-04-11 16:33:05
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் சிக்கிய அல்ஸிபா மருத்துவனையிலிருந்து...

2024-04-10 16:33:44
news-image

சர்வதேச கடன் மறுசீரமைப்பில் அடுத்து நடக்கப்போவது...

2024-04-10 14:29:48
news-image

சுதந்திரம் வழங்கிய சிங்களக் குடியேற்றங்கள்

2024-04-10 14:15:40
news-image

வியட்நாமின் ‘எரியுலை’

2024-04-10 14:01:33
news-image

பாமர மக்களுக்கு, சட்ட அறிவை ஏற்படுத்துவதன்...

2024-04-09 12:44:47
news-image

வடக்கில் நிலவும் அமைதி, வழமைநிலையின் அடிப்புறத்தில்...

2024-04-09 12:45:13
news-image

3 ஆவது தடவையாகவும் பாரதப் பிரதமராக...

2024-04-09 12:23:45
news-image

முஸ்லிம் எம்.பிக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

2024-04-08 19:00:36
news-image

டமஸ்கஸ் தாக்குதல் : திறக்கிறதா மத்திய...

2024-04-08 18:50:01
news-image

அரபுலகின் யதார்த்தம்

2024-04-08 17:52:50